AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குடைக்குள் மழை தெரியும்.. அதென்ன ரயிலுக்குள் மழை.. நாகர்கோவில்- மும்பை விரைவு ரயிலில் நிகழ்ந்த கூத்தை பாருங்க!

Nagercoil Mumbai Train Rainwater Leaked : நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் மழை நீ ர் ஓழுகியது. இதனால், பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது .

குடைக்குள் மழை தெரியும்.. அதென்ன ரயிலுக்குள் மழை.. நாகர்கோவில்- மும்பை விரைவு ரயிலில் நிகழ்ந்த கூத்தை பாருங்க!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Nov 2026 19:01 PM IST

தமிழகம் உள்பட பிற மாநிலங்களிலும் பருவமழை பெய்து வருகிறது. இதில், ஒரு சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகர்கோவில்- மும்பை இடையே லோகமான்ய திலக் டெர்மினல் எக்ஸ்பிரஸ் ரயில் ( வண்டி எண்- 16340 ) இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல, இந்த ரயில் நேற்று புதன்கிழமை இயக்கப்பட்டது. இந்த ரயிலானது சேலம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே சென்ற போது திடீரென அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கூரை வழியாக மழை நீர் கசிய தொடங்கியது. ரயில் செல்ல மழையின் வேகம் அதிகரித்ததன் காரணமாக ரயிலுக்குள் மழை நீர் அதிக அளவு ஒழுகியது.

ஓடும் ரயில் பெட்டியில் ஓழுகிய மழை நீர்

இதனால், ரயிலில் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றும் படுத்திருந்த பயணிகள் இடையூறு ஏற்பட்டு கடும் இன்னலுடன் பயணம் மேற்கொண்டனர். ரயில் பெட்டிக்குள் மழை நீர் ஒழுங்கியதால் பெரும்பாலான பயணிகளின் உடைமைகள் மற்றும் உடைகள் மழையில் நனையும் நிலை ஏற்பட்டது. அத்துடன், ரயிலுக்குள் ஒதுங்கும் நிலை இல்லாததால் கடும் இன்னலுக்கு ஆளாகினர். அத்துடன், ரயில் பெட்டியில் இருந்த மின்சார பலகை மீதும் மழை நீர் வழிந்தோடியது.

மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் பயங்கரம்… தொழிற்சாலை கட்டடம் இடிந்து விபத்து.. இடிபாடில் சிக்கி 3 பேர் பலி!

ரயில் மின்சார பெட்டியில் மழை நீர்

இதனால், சுவிட்ச் மற்றும் இருக்கை உள்ளிட்ட பொருட்களில் மின்சாரம் பாயுமோ என்ற அச்சம் பயணிகள் மத்தியில் எழுந்தது. அத்துடன், கழிவறைக்கு அருகில் இருக்கும் மின்சார கட்டுப்பாட்டு பலகை பகுதியிலும் மழை நீர் ஒழுகி வழிந்து ஓடியது. இது தொடர்பாக ரயில்வே டிக்கெட் பரிசோதரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். அவர் அடுத்து வரும் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் மாற்று ஏற்பாடு செய்வதாக கூறியதாக தெரிகிறது. அவ்வாறு, பலத்த மழைக்கு மத்தியில், ரயில் பெட்டிக்குள் வழிந்த மழை நீரோடு பயணிகள் பயணம் செய்தனர்.

சேலம் ரயில் நிலையத்தில் மழை நீர் அப்புறப்படுத்தும் பணி

சிறிது நேர பயணத்துக்கு பிறகு நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலானது சேலம் ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது, ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து ரயிலில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தினர். இந்த பணிகள் சிறிது நேரம் நீடித்த நிலையில், மும்பை விரைவு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. வெகுதொலைவு பயணிக்கும் ரயிலில் இது போன்ற அசௌகரியம் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களை வைரலாக பரவுகிறது.

மேலும் படிக்க: தீபாவளி பண்டிகை.. விண்ணை முட்டும் விமான கட்டணம்.. சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Follow Us