IPL 2027: ராஜஸ்தான் போட்ட புது கணக்கு.. ஹர்திக் பாண்ட்யாவுக்கு படையெடுக்கும் அணிகள்!
Hardik Pandya IPL Trade: ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் பரிமாற்றம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் அவரை தங்கள் அணியில் சேர்க்க தீவிரமாக உள்ளன. கிரிஸ்பஸ் தகவல்படி, மும்பை இந்தியன்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் இடையே பரிமாற்றம் கிட்டத்தட்ட உறுதி. ராஜஸ்தான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பரிமாற்றம் செய்ய தயாராக இருந்தாலும், மும்பை இன்னும் பந்துவீச்சாளரை தேடுகிறது.
ஐபிஎல் 2027 சீசனுக்கு (IPL 2027) முன்னதாக இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) தற்போது அனைவராலும் பேசப்படுகிறார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முன்னணியில் இருக்க, பெரும்பாலான அணிகள் அவரைத் தங்கள் ஐபிஎல் அணியில் சேர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. கிரிக்பஸ் தகவலின்படி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான பரிமாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பஞ்சாப் அணி, அர்ஷ்தீப் சிங் மற்றும் விஷ்ணு வினோத் ஆகியோருக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை வாங்க முயற்சித்து வருகிறது. இதற்கிடையில், ராஜஸ்தான் அணியும் ஹர்திக்கை வாங்கக் குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ: தலா 2 வீரர்கள் பரிமாற்றம்.. சிஎஸ்கே – எஸ்ஆர்ஹெச் ரகசிய அதிரடி ஒப்பந்தம்..!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் திட்டம் என்ன..?
பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் பரிமாற்றப் போட்டியில் ராஜஸ்தானும் நுழைந்துள்ளது. அவர்கள் தங்களது நட்சத்திர தொடக்க பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யவை பரிமாற்றம் செய்யத் தயாராக உள்ளனர். மேலும், ரவி பிஷ்னோயை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.




இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பேட்ஸ்மேனுடன் ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளரையும் தேடிக்கொண்டிருப்பதால், இந்த நேரத்தில் ராஜஸ்தானுடன் ஒரு பரிமாற்றம் நடப்பது சாத்தியமில்லை. மறுபுறம், ராஜஸ்தான் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற ஒரு பந்து வீச்சாளரை விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை. மேலும், மும்பை ராஜஸ்தானிடம் அத்தகைய கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ் பரிமாற்றம் செய்ய வாய்ப்பா..?
ஹர்திக் பாண்ட்யா பரிமாற்றத்திற்கு மத்தியில், சூர்யகுமார் யாதவ் தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் மற்ற அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வதந்திகள் பரவின. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் பரிமாற்றத்திற்கு கிடைக்கவில்லை என்றும், அவரைப் பற்றி எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை, இனிமேலும் நடைபெறாது என்றும் மும்பை வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ஹர்திக் பாண்ட்யா பரிமாற்றம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்த கேள்விக்கு மும்பை வட்டாரம் மௌனம் காத்தது.
ALSO READ: மும்பைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா சூர்யகுமார் யாதவ்..? இன்ஸ்டாவில் போஸ்ட்!
மோசமாகச் செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் 2026 சீசனில் மிக மோசமாக செயல்பட்டது. மும்பை அணி ஆடிய 14 போட்டிகளில் வெறும் 10-ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தனர். கேப்டனாகவும் வீரராகவும் ஹர்திக்கின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக இருந்ததால், அணியில் மாற்றங்கள் செய்வது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகிவிட்டது.