Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
IPL

IPL

இந்தியன் பிரீமியர் லீக் என்பது ஒரு தொழில்முறை ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் போட்டியாகும். இது இந்தியாவில் இருக்கும் 10 முக்கிய நகரங்களில் இருந்து பத்து அணிகள் களமிறங்கி விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பை இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கி தற்போது 18வது சீசனை எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் என்பது மிக முக்கியமானது. இந்த வருடத்துக்கான ஐபிஎல் ஏற்கெனவே தொடங்கி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கோடைக்காலத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தங்களுக்கு பிடித்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தங்களது முழு ஆதவரையும் அளித்து வருகின்றனர். இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் போட்டி தொடங்கிய நாள் முதலே இருந்து வருகிறது. மாற்றங்களுடன் பல உலக சாதனைகளும் அரங்கேறி வருகிறது. தினம் தினம் நடக்கும் ஐபிஎல் ஆட்டங்களில் அப்டேட்களை இங்கு படிக்கலாம்

Read More

IPL 2026: மிரட்டப்போகும் ஐபிஎல் 2026.. தயாரான கேப்டன்கள்.. அனைத்து அணிகளின் முழு விவரங்கள்!

IPL 2026 All Teams Players List: 2025 டிசம்பர் 16ம் தேதியான நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 215.45 கோடிக்கு மொத்தம் 77 வீரர்களை 10 அணிகள் ஏலம் எடுத்தனர். இந்த மினி-ஏலத்தில் கேமரூன் க்ரீன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 25.20 கோடிக்கு வாங்கியது.

CSK Full Squad 2026: அனுபவம் முதல் இளம் படை வரை.. ஐபிஎல் 2026ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அணி விவரம்!

Chennai Super Kings Full Squad: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 18 கோடி கொடுத்து சஞ்சு சாம்சனை வர்த்தகம் மூலம் தங்கள் அணியில் சேர்த்தது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

IPL Auction 2026: ஐபிஎல் 2026 ஏலத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அதிக விலைக்கு ஏலம் போன 5 வீரர்கள்..!

Most Expensive Players in IPL 2026 Auction: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், இலங்கை வேகப்பந்து வீச்சாளருமான மதிஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 18 கோடிக்கு வாங்கியது. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 அன்கேப்டு வீரர்களுக்கு அதிக செலவை மேற்கொண்டது.

IPL 2026 Auction: அன்கேப்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ரூ. 8.40 கோடிக்கு ஆகிப் நபி.. ரூ. 14 கோடிக்கு பிரஷாந்த் வீர்!

IPL Uncapped Players: 20 வயதான பிரஷாந்த் வீரை வாங்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கடுமையாக மோதியது. இதில், பிரஷாந்த் வீரை ரூ.14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அன்கேப்டு வீரராக அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை பிரஷாந்த் வீர் படைத்தார்.

IPL 2026 Auction: 18 கோடிக்கு பத்திரனா.. 7 கோடிக்கு ரவி பிஷ்னோய்.. அதிக தொகைக்கு சுற்றி வளைத்த அணிகள்!

Matheesha Pathirana: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த மதீஷா பத்திரனாவை ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ரூ. 18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. முன்னதாக, ரூ. 23.25 கோடிக்கு கேமரூன் க்ரீனை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

IPL 2026 Auction: வெங்கடேஷ் ஐயருக்கு ஆர்சிபி போட்ட கொக்கி.. ரூ. 7 கோடிக்கு மடக்கி அணியில் சேர்ப்பு!

Venkatesh Iyer : 2025 ஐபிஎல் ஏலத்தில் 4வது அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை வெங்கடேஷ் ஐயர் பெற்றார். இருப்பினும், முந்தைய பதிப்பில் 11 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் உள்பட 142 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

IPL 2026 Auction: கேமரூன் க்ரீனுக்கு பக்கா குறி.. ரூ. 25.20 கோடிக்கு தூக்கிய கொல்கத்தா அணி!

Kolkata Knight Riders: ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் கேமரூன் க்ரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. முன்னதாக, ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் முதல் ஆளாக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரரை மெக்குர்க்கை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை.

IPL Auction 2026 Live: தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. KKR அணிக்கு செல்லும் மதீஷா பதிரானா

IPL Auction 2026 Live Updates in Tamil : ஐபிஎல் ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்று வருகிறது. 77 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்போது 369 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். வீரர்களை அணிகள் போட்டிப்போட்டுக்கொண்டு எடுக்கின்றன. சில வீரர்கள் ஏலம் போகாமலும் உள்ளனர்

IPL 2026 Auction: புதிதாக 19 வீரர்கள்.. பட்டியலை நீட்டித்த பிசிசிஐ.. எதிர்பார்ப்பை தூண்டும் ஐபிஎல் 2026 மினி ஏலம்!

IPL 2026 Mini Auction: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு 1,390 பதிவு செய்யப்பட்ட வீரர்களின் நீண்ட பட்டியலிலிருந்து 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டனர். இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாகா நேற்று அதாவது 2025 டிசம்பர் 15ம் தேதி இரவு தாமதமாக 19 வீரர்கள் அதிரடியாக சேர்க்கப்பட்டனர்.

IPL Auction 2026 Live Streaming: சூடுபிடிக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலம்.. எப்போது, ​​எங்கே நேரடியாக பார்க்கலாம்?

IPL 2026 Auction Date, Time: 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் கையில் உள்ளது. 10 அணிகளும் டெவோன் கான்வே (Devon Conway), கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் சர்பராஸ் கான் போன்ற குறிப்பிடத்தக்க வீரர்கள் மீது பந்தயம் கட்டலாம்.

IPL Auction 2026: சிஎஸ்கே அணிக்கு இந்த வரிசையில் சிக்கல்.. ஐபிஎல் மினி ஏலத்தில் யாரை குறிவைக்கும்..?

Chennai Super Kings: ஐபிஎல் 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 28 பேர் கொண்ட அணியில் இருந்து மொத்தம் 12 வீரர்களை விடுவித்துள்ளது. ஐபிஎல் 2026 மினி-ஏலத்தில் மொத்தம் 9 வீரர்களை அணி ஏலம் எடுக்க வேண்டும். இதில் 4 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

IPL 2026 Auction: தெறிக்கப்போகும் ஐபிஎல் மினி ஏலம்.. அணிகள் வாங்க மறுக்கப்போகும் 5 வீரர்கள்..!

IPL Auction Foreign Players: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித் உள்பட இந்த 5 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை (Foreign Players) ஏலம் எடுக்க அணிகளின் உரிமையாளர்கள் தயக்கம் கொள்வார்கள். அவர்கள் யாராக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

IPL 2026: ஐபிஎல் 2026 ஏல பட்டியலில் திடீர் மாற்றம்.. புது ட்விஸ்ட் கொடுத்த பிசிசிஐ!

IPL 2026 Mini Auction: ஐபிஎல் 2026 மினி-ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் மொத்தமாக 247 இந்தியர்கள் மற்றும் 112 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 359 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள 359 வீரர்களில் 77 வீரர்களை மட்டுமே 10 அணிகளும் ஏலத்தில் எடுக்கும்.

IPL 2026 Auction: ஐபிஎல் ஏலத்தில் முதலில் எடுக்கப்படும் 6 வீரர்கள்.. விவரம்!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக், ஐபிஎல் அல்லது இந்தியன் பிரீமியர் லீக், 2008 முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ-ஆதரவு பெற்ற இந்தப் போட்டியில் ஐபிஎல் ஏலமும் அடங்கும், இதில் 10 அணிகள் நூற்றுக்கணக்கான வீரர்களை ஏலம் எடுக்கின்றன. வரும் ஐபிஎல்க்கான ஏலம் குறித்து பார்க்கலாம்

IPL 2026: மொத்தமாக 350 வீரர்கள்.. 77 இடங்களுக்கு கடும் போட்டி.. வெளியான மினி ஏல வீரர்கள் பட்டியல்!

IPL 2026 Mini Auction Full Players List: ஐபிஎல் செய்திக்குறிப்பின்படி, மொத்தம் 1,390 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யப்பட்டனர், பின்னர் இது 1,005 ஆகக் குறைக்கப்பட்டது. இந்த வீரர்களில் இருந்து, 350 வீரர்களின் இறுதிப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. 10 ஐபிஎல் உரிமையாளர்கள் இந்த 350 வீரர்களில் அதிகபட்சமாக 77 வீரர்களை ஏலத்தில் வாங்க முடியும்.