IPL 2026: வெளியான தேர்தல் தேதிகள்! ஐபிஎல் 2026ன் 2ம் கட்ட அட்டவணை எப்போது வெளியிடப்படும்? பிசிசிஐ துணைத் தலைவர் பதில்!
IPL 2026 Second Phase Schedule: தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அதாவது 2026 மார்ச் 15ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதிகள் காரணமாக, ஐபிஎல் அட்டவணையை கட்டம் கட்டமாக வெளியிட திட்டமிடப்பட்டது. முதல் கட்ட அட்டவணை கடந்த 2026 மார்ச் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் 2026 இன் (IPL 2026) முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையும் அடங்கும். இதில், வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் பிரமாண்டமாக தொடங்கி நடைபெறவுள்ளன. இந்தநிலையில், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, தேர்தல் தேதிகள் (Election Date) வெளியான பிறகு ஐபிஎல் போட்டியின் இரண்டாம் கட்ட அட்டவணை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஐபிஎல் 2026க்கான 2வது கட்ட அட்டவணை விரைவில் வெளியாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அதாவது 2026 மார்ச் 15ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதிகள் காரணமாக, ஐபிஎல் அட்டவணையை கட்டம் கட்டமாக வெளியிட திட்டமிடப்பட்டது. முதல் கட்ட அட்டவணை கடந்த 2026 மார்ச் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது.




ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப்.. ஆதிக்கம் செலுத்தும் கோலி – ஏபிடி கூட்டணி!
ஐபிஎல் அட்டவணை குறித்து ராஜீவ் சுக்லா என்ன சொன்னார்?
#WATCH | Delhi: Rajeev Shukla, BCCI Vice President, says, “The dates of elections have been announced. The polling will take place in a single phase in 4 places and in 2 phases in West Bengal. Now, the schedule of IPL will be released soon.” pic.twitter.com/1JJIqsJJMw
— ANI (@ANI) March 15, 2026
ஐபிஎல் 2026க்கான 2ம் கட்ட அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து பேசிய பிசிசிஐ துணை செயலாளர் ராஜீவ் சுக்லா, “ மேற்கு வங்கத்தில் 4 இடங்களில் ஒரு கட்டமாகவும், பிற இடங்களில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும். தமிழ்நாட்டிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.இப்போது ஐபிஎல் முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறினார்.
2026ம் ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஒரு யூனியன் பிரதேசம் அடங்கும், அதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அதாவது 2026 மார்ச் 15ம் தேதி அறிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவை அடங்கும். ஐபிஎல் போட்டிகள் மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் அசாமில் நடத்தப்பட இருக்கிறது.
மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு அதிக போட்டிகளை நடத்துகின்றன. அதே நேரத்தில் அஸ்ஸாம் குறைவாகவே நடத்துகிறது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியம்), தமிழ்நாட்டில் சென்னை (எம். சிதம்பரம் ஸ்டேடியம்) மற்றும் குவஹாத்தி (அசாம்) ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன.
ALSO READ: கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே அணியின் பலம் என்ன?
எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் எப்போது..?
தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஒரே ஒரு கட்டமாக மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும். மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.
- அசாம் தேர்தல் – 2026 ஏப்ரல் 9, முடிவுகள் – மே 4
- தமிழ்நாடு – 2026 ஏப்ரல் 23, முடிவுகள் – மே 4
- கேரளா – 2026 ஏப்ரல் 9, முடிவுகள் – மே 4
- புதுச்சேரி – 2026 ஏப்ரல் 9, முடிவுகள் – மே 4
- மேற்கு வங்கம் – 2026 ஏப்ரல் 23 மற்றும் 29, முடிவுகள் – மே 4.