AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.. எந்த எந்த மாநிலங்களுக்கு எந்த தேதியில் தேர்தல்!

5 States Election Dates Announced | இந்தியாவில் மிகுந்த எதிர்பார்க்கு மத்தியில் 5 மாநில தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் மாதமே வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மே 4, 2026 அன்று வாக்கு எண்ணப்பட உள்ளது.

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.. எந்த எந்த மாநிலங்களுக்கு எந்த தேதியில் தேர்தல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Mar 2026 17:08 PM IST

டெல்லி, மார்ச் 15 : தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எந்த எந்த மாநிலங்களுக்கு எந்த எந்த தேதிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறித்த அட்டவணையை அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், 5 மாநில தேர்தல் அட்டவணை குறித்து விரிவாக பார்க்கலாம்.

5 மாநில சட்டமன்ற தேர்தல் – அட்டவணை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ளது.

வ.எண் மாநிலங்கள்  வாக்குப்பதிவு  வாக்கு எண்ணிக்கை 
1 தமிழ்நாடு ஏப்ரல் 23, 2026 மே 04, 2026
2 கேரளா ஏப்ரல் 09, 2026 மே 04, 2026
3 புதுச்சேரி ஏப்ரல் 09, 2026 மே 04, 2026
4 அசாம் ஏப்ரல் 09, 2026 மே 04, 2026
5 மேற்கு வங்கம் 23 ஏப்ரல் 2026 மற்றும் 29 ஏப்ரல் 2026 மே 04, 2026

இந்த 5 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்திற்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : K. Ponmudi Tamil Nadu Election: விழுப்புரத்தில் தொடர் வெற்றியில் திளைத்த க.பொன்முடி… மீண்டும் களமிறக்கப்படுவாரா!

தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் என்ன என்ன?

தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், தெளிவான சின்னங்கள், தனனார்வலர்களின் உதவி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வாக்களிக்கும் அறைகளில் போதுமான வெளிச்சமும், தேர்தல் மையங்களில் போதுமான நிழலும் இருக்கவும் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதையும் படிங்க : Alandur Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை கொண்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி.. மக்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்போவது திமுகவா அதிமுகவா?

மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனிப்பும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us