நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படத்தின் முதல் பாடலான 'பொம்மா பொம்மா' வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படப்பிடிப்பு புகைப்படங்கள் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படத்தின் இசை பயணம், தற்போது இந்த ரொமான்டிக் பாடலுடன் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் துல்கர் சல்மானும், பூஜா ஹெக்டேவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். ரயில் நிலையத்தில் பூஜா ஹெக்டேவை முதல் பார்வையிலேயே காதலிக்கும் துல்கரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.