வேட்டைக்காரன் படத்தில் அப்போவோட டான்ஸ் ஆடிய தருணம் – ஜேசன் சஞ்சயின் வைரல் பேச்சு
Jason Sanjay shares experience of the Vettaikaaran movie song | நடிகர் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக அறிமுகம் ஆகும் நிலையில் தொடர்ந்து அவரது பேட்டிகள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருப்பவர் தளபதி விஜய். இவர் முதலமைச்சராக ஆவதற்கு முன்பே சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து விட்டார். அவர் அறிவிக்கும் போது அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் சிக்மா. நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதன் காரணமாக படத்தின் இயக்குநர் மற்றும் நாயகன் ஆகியோர் தொடர்ந்து பல பேட்டிகளை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது சிக்மா படம் குறித்து மட்டும் அல்லாமல் தனது குடும்பம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்கள் அவர் வெளிப்படையாக பேசி இருந்தார். அதிலும் குறிப்பாக வேட்டைக்காரன் படத்தில் தனது தந்தை உடன் வேட்டைக்காரன் படத்தில் நடனம் ஆடியது குறித்து அவர் வெளிப்படையாக பேசியதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வேட்டைக்காரன் படத்தில் அப்போவோட டான்ஸ் ஆடிய தருணம்:
இயக்குநரிடம் ஒரு யோசனை இருப்பதாகவும், அதில் நான் பங்கேற்க விருப்பமா என்றும் என் அப்பா என்னிடம் வந்து கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. நான், சரி, தாராளமாகச் செய்யலாமே என்று ஒப்புக்கொண்டேன். இப்போது இந்த வயதை அடைந்த நிலையில் அந்தப் பாடலைப் பார்க்கும்போது, எனக்கும் அந்தப் பாடலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றே தோன்றுகிறது. அந்தப் படத்தில் நான் ஏன் இருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அது எங்கள் குடும்பம் அனைவருக்கும் ஒரு உணர்வுபூர்வமான தருணமாக அமைகிறது என்று ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் நடனம் ஆடியது குறித்து பேசி உள்ளார்.
Also Read… சேயோன் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JasonSanjay shares the Experience of #Vettaikaaran song:
“I remember my father came and asked me like the director has some idea, do you want to be part of it.. I said, “Ok sure why not..” Now when I got the maturity and when i watch it, “Indha song kum enakum samandhame ila..…
— Laxmi Kanth (@iammoviebuff007) August 8, 2026
Also Read… ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்டில் சிஎம் என போட இதுதான் காரணம் – இயக்குநர் எச். வினோத்



