AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேயோன் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்? வைரலாகும் தகவல்

Seyon Movie Shooting Update | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சேயோன். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சேயோன் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்? வைரலாகும் தகவல்
சேயோன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Aug 2026 19:30 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி அடுத்தடுத்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவே தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் இருந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் பலப் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் சேயோன்.

சேயோன் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்?

இந்தப் படத்தினை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முதலாவதாக திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கத் தொடங்கினார். இந்தப் படத்தை கமல் ஹாசன் தயாரித்து வரும் நிலையில் படத்திற்கு சேயோன் என்று பெயர் வைத்துள்ளனர். தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான தகவல்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் தற்போது வெளியான தகவலின்படி, சேயோன் திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. இத்திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க அன்பறிவு சண்டைக் கலை இயக்குநர்கள் குழுவினர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் பங்கேற்கும் பல சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. வழக்கமான கிராமத்துக் கதைக்களத்தைக் கொண்ட படங்களில் காணப்படும் சண்டைக் காட்சிகளிலிருந்து இவை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு கிராமத்துக் கதைக்களத்தைக் கொண்ட படத்திற்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையிலும், மிகவும் பிரம்மாண்டமான முறையிலும் இச்சண்டைக் காட்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… Nani: கொதித்தெழும் சூறாவளி.. அதிரடியாக வெளியான நானியின் ‘தி பாரடைஸ்’ பட டீசர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… டிசி முதல் ஜிடிஎன் வரை… நாளை பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

Follow Us