AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை!”.. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்..

TN Governor Delhi visit: நாளை டெல்லி செல்லும் தமிழ்நாடு ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசவுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்த விரிவான அறிக்கை மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை!”.. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்..
தமிழக ஆளுநர் அர்லேகர், மத்திய அமைச்சர் அமித்ஷா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Nov 2026 08:41 AM IST

சென்னை, நவ.12: தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய நிகழ்வாக, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் (Convocation) பங்கேற்பதற்காக ஆளுநர் அங்குச் செல்ல உள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, அதற்கு முன்னதாக வரும் 13ஆம் தேதி (நாளை) காலை அவர் டெல்லி செல்கிறார். அந்தவகையில், டெல்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: “சர்ச்சைகளில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏக்கள்!”.. தனியாக அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்த முதல்வர் விஜய்!!

ஆளுநரின் முதல் முறை சந்திப்பு:

தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசவுள்ளது இதுவே முதல்முறையாகும். கடந்த வாரம் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர், அங்கு நாட்டின் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். அந்த வரிசையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சருடனான இந்தச் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நிர்வாகப் பணிகள் குறித்து மத்திய அரகத்திற்குத் தெரிவிக்கப்படும் முக்கியப் சந்திப்பாக இது கருதப்படுகின்றது.

சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை:

சமீபத்தில் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநர் தரப்பிடமிருந்து கோரியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், டெல்லி செல்லும் ஆளுநர், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழல், பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய அறிக்கையை உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் விரிவான ஆலோசனைகளில் ஈடுபடுவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு!

பயண அட்டவணையும் சென்னை திரும்புதலும்:

நாளை (13ஆம் தேதி) காலை டெல்லி செல்லும் ஆளுநர், உள்துறை அமைச்சருடனான சந்திப்பை முடித்துவிட்டு அன்றைய தினம் இரவே ஜம்மு-காஷ்மீருக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு, வரும் 15ஆம் தேதி மீண்டும் டெல்லி திரும்பும் அவர், அத்தோடு தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு அன்றைய தினமே சென்னை திரும்ப உள்ளார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. டெல்லியில் நடைபெறும் இந்த உயர்மட்டச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us