IPL 2027: ரிஷப் பண்ட் முதல் ஹர்திக் பாண்ட்யா வரை.. இதுவரை பரிமாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்!
IPL 2027 Player Transfers: ஐபிஎல் 2027 வீரர் பரிமாற்ற சாளரம் திறக்கப்பட்டு, அணிகள் தங்களது வீரர்களை மாற்றிக்கொள்கின்றன. ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா போன்ற முக்கிய கேப்டன்கள் புதிய அணிகளுக்கு மாறி அசத்தியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே எதிர்பாராத பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஐபிஎல் 2027-க்கான (IPL 2027) வீரர் பரிமாற்ற சாளரம் திறக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் சீசனுக்கான ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னர், அனைத்து 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வருகின்ற 2026 நவம்பர் 17ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இதுவரை, ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் உட்பட மொத்தம் 10 வீரர்கள் இந்த வீரர் பரிமாற்ற சாளரத்தைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ALSO READ: ஐபிஎல் 2028ல் மேலும் 2 அணிகள் சேர்ப்பு..? மறுத்த பிசிசிஐ!
ஐபிஎல் 2027-க்கு முன்பு நடந்திருப்பது, இந்த லீக்கின் வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒருபோதும் நடந்ததில்லை. இந்த முறை, 2 அணியின் கேப்டன்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து வெளியேறி தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ளார். ஹர்திக் பாண்ட்யாவும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். இவர்கள் இருவரும் தத்தம் அணிகளின் கேப்டன்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஒரு ஆச்சரியமான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர்களான கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் சென்னையிலிருந்து ஹைதராபாத் அணிக்கு மாறியுள்ளன. அதே சமயம், ஜாக் எட்வர்ட்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளனர். இந்த வீரர் பரிமாற்றம் ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ALSO READ: பஞ்சாப் அணியில் ஹர்திக் பாண்ட்யா.. கேப்டன்ஷியில் மாற்றமா..?
ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக பரிமாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்:
- ரிஷப் பண்ட் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு – சம்பளம் ரூ. 15 கோடி.
- குல்தீப் யாதவ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு – சம்பளம் ரூ. 13.5 கோடி.
- டி. நடராஜன் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு – சம்பளம் ரூ. 5 கோடி.
- ஜீஷன் அன்சாரி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு – சம்பளம் ரூ. 40 லட்சம்.
- லியாம் லிவிங்ஸ்டோன் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு – ரூ. 6 கோடி.
- ஜாக் எட்வர்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு – ரூ. 3 கோடி.
- கலீல் அகமது – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு – ரூ. 4.8 கோடி.
- நாதன் எல்லிஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு – ரூ. 2 கோடி.
- ஹர்திக் பாண்ட்யா – மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு – ரூ. 18 கோடி.
- அர்ஷ்தீப் சிங் – பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு – ரூ. 18 கோடி.