Arshdeep Engagement: நியூசிலாந்தில் காதல் ப்ரோபோசல்.. இணையத்தை ட்ரெண்டாக்கிய அர்ஷ்தீப் – சம்ரீன் ஜோடி!
Arshdeep Singh - Samreen Kaur Love Proposal: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங், தனது காதலி சம்ரீன் கவுரை நியூசிலாந்தில் ஒரு திரைப்பட பாணியில் காதலை வெளிப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நவம்பர் 11, 2026 அன்று நடந்த இந்த நிகழ்வின் காதல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகையும், மிஸ் இந்தியா பட்டம் வென்றவருமான சம்ரீன் கவுருடன், அர்ஷ்தீப்பின் புதிய அத்தியாயம் ஆரம்பமானது.
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் நபராக இருந்து வருகிறார். சமீபத்தில், ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விலகி, ஒரு டிரேடிங் ஒப்பந்தத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் (Mumbai Indians) அர்ஷ்தீப் சிங் இணைந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தற்போது அர்ஷ்தீப் சிங் திடீரென தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இன்று அதாவது 2026 நவம்பர் 11ம் தேதி, அர்ஷ்தீப் சிங் தனது காதலி சம்ரீன் கவுரிடம் ஒரு திரைப்பட பாணியில் தனது காதல் நினைவாக மோதிரத்தை அணிந்து காதலை வெளிப்படுத்தினார். தற்போது அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ALSO READ: ஒருநாள் கேப்டனாக களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி..?




அர்ஷ்தீப் – சம்ரீன் புகைப்படங்கள்:
😂 Arshdeep Singh’s biggest challenge after getting engaged to Samreen Kaur?
Keeping his wife’s yorkers under control and finally getting rid of those wide balls! 🤣💍
Shaadi ke baad line & length sudhar jaani chahiye, Arshdeep! 😂🏏 https://t.co/xqWDiwS7bx
— Sagar_H 🏏 (@SagarH62) November 11, 2026
வைரலான புகைப்படத்தில், அர்ஷ்தீப் சிங் மண்டியிட்டு சம்ரீன் கவுரிடம் தன் காதலைத் தெரிவிக்கிறார். அவர் சம்ரீனின் விரலில் மோதிரம் அணிவிக்கும்போது, மிகவும் காதல் ததும்பும் தோற்றத்தில் இருக்கிறார். அர்ஷ்தீப் சம்ரீன் ஆகியோர் தங்களது காதல் வாழ்க்கையின் நினைவுகள் மற்றும் அழகான தருணத்தை நியூசிலாந்தில் உருவாக்கியுள்ளார். அர்ஷ்தீப்பும் சம்ரீனும் இந்தக் காதல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, அர்ஷ்தீப் சிங் காதல் சம்ரீன், “வாழ்க்கை எங்களுக்கு அளித்திருக்கக்கூடிய அத்தனை விஷயங்களிலும், அது எங்களுக்கு ஒருவரையொருவர் அளித்ததே மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த வாழ்நாள் தோழமைக்கு, 11.11.2026 (ஹாய் வருங்காலக் கணவரே)” என்று எழுதியுள்ளார்.
ALSO READ: ஐபிஎல் 2027 எதிர்பார்ப்புகள்.. மும்பை இந்தியன்ஸ் விடுவிக்கப்போகும் வீரர்கள் இவர்களா?
அர்ஷ்தீப்பின் வருங்கால மனைவி சம்ரீன் கவுர் யார்?
அர்ஷ்தீப்பும் சம்ரீனும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். சம்ரீன் பல பஞ்சாபி இசை வீடியோக்களில் . அவரது கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகும். சம்ரீன் ’83’ என்ற பாலிவுட் படத்திலும் நடித்தார். அதில் அவரது கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் நினைவில் நிற்கும் வகையில் இருந்தது. மேலும், சம்ரீன் ‘நெயில் பாலிஷ்’ போன்ற வெப் சீரிஸ்களிலும், பல வெற்றி பெற்ற பஞ்சாபி பாடல்களிலும் பணியாற்றியுள்ளார். சம்ரீன் ‘மிஸ் இந்தியா, ஜம்மு மற்றும் காஷ்மீர்’ பட்டத்தையும் வென்றுள்ளார்.
அர்ஷ்தீப் மற்றும் சம்ரீனுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து:
இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் – சம்ரீன் கவுர் ஜோடியின் நிச்சயதார்த்தம் குறித்து தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். கமெண்ட் பகுதியில் ஹர்திக் பாண்ட்யா “வாழ்த்துகள், கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.