AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: ஒருநாள் கேப்டனாக களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி..?

India vs NZ 4th ODI: இந்தியா vs நியூசிலாந்து ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெஸ்ட் தொடர் காரணமாக சுப்மன் கில், கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை வழிநடத்துவார். திலக் வர்மா, குமார் குஷாக்ரா போன்ற புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

IND vs NZ: ஒருநாள் கேப்டனாக களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி..?
ஷ்ரேயாஸ் ஐயர்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Nov 2026 18:50 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணி மாற்றங்களுடன் களமிறங்குகிறது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் ஆகியோர் கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார்கள். வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக, இவ்விரு வீரர்களும் ஒருநாள் அணியிலிருந்து விலகியுள்ளனர். கடைசி இரண்டு போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு (Indian Cricket Team) தலைமை தாங்குவார். தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. ஹாமில்டனில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் 3வது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக, இந்திய அணி 2-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையில் உள்ளது.

ALSO READ: ஆதிக்கம் செலுத்திய மழை… இந்தியா – நியூசிலாந்து போட்டி கைவிடப்பட்டதாக அறிவிப்பு

இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்:

டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து சுப்மன் கில் மற்றும் ராகுல் நீக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜும் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார். இந்த வீரர்கள் இல்லாத நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அணியை வழிநடத்துவார். திலக் வர்மா மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான குமார் குஷாக்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கம்போஜுக்குப் பதிலாக யாஷ் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யார் யார் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்பு..?

நான்காவது ஒருநாள் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல். ராகுல் இல்லாத நிலையில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக களமிறங்கலாம். அதே சமயம் விராட் கோலி மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்து அணிக்கு தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர் வரிசையில் நமன் தீர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் மிடில் ஆர்டரில் இடம்பெறக்கூடும்.

இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி..?

இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியிலும் மாற்றம் ஏற்படலாம். கம்போஜுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் யாஷ் தாக்கூர் ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். இருப்பினும் இறுதி முடிவு அணியின் விருப்பமான சமநிலையைப் பொறுத்தே அமையும்.

அர்ஷ்தீப் சிங், அகிப் நபி தார் மற்றும் குர்னூர் பிரார் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் பந்துவீச்சுத் தாக்குதலில் இடம்பெறக்கூடும். முகமது சிராஜ் மற்றொரு வேகப்பந்து வீச்சுத் தேர்வாக உள்ளார்.

ALSO READ: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. முக்கிய வீரர்களை களமிறக்கிய நியூசிலாந்து அணி!

கணிக்கப்பட்ட இந்திய பிளேயிங் லெவன் விவரம்:

ருதுராஜ் கெய்க்வாட், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), நமன் தீர், அக்சர் படேல், அகிப் நபி தார், குல்தீப் யாதவ் / யாஷ் தாக்கூர், குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப் சிங்

4வது ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா , நமன் தீர், ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் படேல் , இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), அகிப் நபி தார், குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப் சிங், யாஷ் தாக்கூர்

Follow Us