IND vs NZ: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. முக்கிய வீரர்களை களமிறக்கிய நியூசிலாந்து அணி!
New Zealand Test squad: இந்தியாவுக்கு எதிரான 2026 டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக விலகியிருந்த டாம் பிளண்டெல், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். நவம்பர் 19 அன்று தொடங்கும் முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெறும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து, இந்தத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் (IND vs NZ) கொண்ட டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. இதில், நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடர் வருகின்ற 2026 நவம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டி வெலிங்டனில் நடைபெறுகிறது. தொடரை நடத்தும் நியூசிலாந்து அணி (New Zealand Cricket Team), காயம் காரணமாக விலகியிருந்த 3 வீரர்களையும் தங்களது அணியில் சேர்த்துள்ளது. இந்த முடிவு ஆச்சரியமளிப்பதாகத் தெரிகிறது.
ALSO READ: ஆதிக்கம் செலுத்திய மழை… இந்தியா – நியூசிலாந்து போட்டி கைவிடப்பட்டதாக அறிவிப்பு




காயமடைந்த வீரர்களில் டாம் பிளண்டெல், டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடங்குவர். பிளண்டெலுக்கு தொடை முன்புறத் தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான பயிற்சியின் போது கான்வேக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மூளையதிர்ச்சி காரணமாக கான்வே ஒருநாள் தொடரிலிருந்து விலக்கப்பட்டார். ரச்சினுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, 2024-ல் இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடின. இந்திய மண்ணில் நடைபெற்ற அந்தத் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் வென்றது. எனவே, நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரின் மீது அனைவரின் கவனமும் இருக்கும். 2025-27 காலகட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து தற்போது முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே அணிதான் நியூசிலாந்தின் தற்போதைய அணியாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி அணிக்குத் திரும்பியுள்ளார், அதே சமயம் பென் சியர்ஸ் (கணுக்கால் காயம்), ஜாக் ஃபாக்ஸ் (இடுப்புக் காயம்) மற்றும் வில் ஓ’ரூர்க் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி
Test cricket returns! 🇳🇿
Our Test squad for the Hero Vida Test Series, Powered by Ai+ Nova Smartphone, starting at the Cello Basin Reserve on November 19. https://t.co/begExEGl7m
— BLACKCAPS (@BLACKCAPS) November 10, 2026
டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளண்டெல், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர், வில் யங்.
ALSO READ: கிடைக்காத வாய்ப்பு.. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த முகமது ஷமி!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் காம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி. குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை
- முதல் டெஸ்ட்: 19–24 நவம்பர் 2026, வெலிங்டன்
- இரண்டாவது டெஸ்ட்: நவம்பர் 27 – டிசம்பர் 2 2026, கிறைஸ்ட்சர்ச்