AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சேவ் தி டேட்.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Inji Vellam Movie Release Date: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மணிரத்தினம். இவரின் இயக்கத்தில் தற்போது தமிழில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் இஞ்சி வெல்லம். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது இதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவ் தி டேட்.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் தேதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Nov 2026 18:08 PM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவர் இயக்குநர் மணிரத்தினம் (Director Mani Ratnam) இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம்தான் இஞ்சி வெல்லம் (Inji Vellam Movie). ஏற்கனவே “செக்க சிவந்த வானம்” (CCV Movie) என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் மணிரத்தினம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக இணைந்துள்ள திரைப்படம்தான் இஞ்சி வெல்லம். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பான் இந்திய பிரபல நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). இந்த படமானது வித்தியாசமான காதல் கதையில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங்கானது முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இஞ்சி வெல்லம் படத்தில் விஜய் சேதுபதிக்கு இத்தனை தோற்றங்களா? வைரலாகும் தகவல்

விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் தேதி:

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மொத்தம் 3 வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கும் நிலையில், இந்த படமானது சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்தினத்தின் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு காதல் படமாக இப்படம் அமைந்துள்ள நிலையில், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

இதையும் படிங்க: ஓம் படத்தில் மம்முட்டி – சாய் பல்லவியை தேர்ந்தெடுக்க காரணம் அதுதான் – ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

இந்நிலையில் இந்த படமானது வரும் 2027ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாம். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு:

இந்த படத்திற்கு இசையமைப்பாள ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இப்படம் இருக்கும் நிலையில், தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow Us