ஓம் படத்தில் மம்முட்டி – சாய் பல்லவியை தேர்ந்தெடுக்க காரணம் அதுதான் – ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!
Rajkumar Periasamy About Mammootty And Sai Pallavi: தமிழில் ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக நுழைந்தவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் அமரன் திரைப்படத்தை இயக்கியும் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தார். இவர் தனுஷின் ஓம் படத்தையும் இயக்கியுள்ள நிலையில், அதில் மம்முட்டி மற்றும் சாய் பல்லவியை நடிக்க வைக்க காரணத்தை தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் மக்கள் கொண்டாடும் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் கர (Kara Movie). கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர், அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Direcrtor Rajkumar Periasamy) இயக்கத்தில், இணைந்த திரைப்படம்தான் ஓம். இப்படமானது ஆரம்பத்தில் டி55 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகே ஓம் சாப்டர் 1 (Om Movie Chapter 1) என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் லீட் ஹீரோவாக தனுஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் மலையாள ஸ்டார் மம்முட்டி (Mammootty) இணைந்து நடித்துள்ளனர்.
இப்பட ப்ரோமோஷன் தொடர்பாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர் மம்முட்டி மற்றும் சாய் பல்லவியை இப்படத்தில் நடிக்கவைக்க என்ன காரணம் என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார். அது தொடர்பான தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அது எனக்கு ரொம்ப பயமா இருந்தது.. சீன் படத்தின் கதை லீக் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!
மம்முட்டி மற்றும் சாய் பல்லவியை நடிக்க வைக்க காரணம் சொன்ன இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி:
அந்த பேட்டியில் பேசியிருந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “இந்த ஓம் திரைப்படத்தில் தனுஷ் சாருக்கும், மம்மூட்டி சாருக்கும் இடையே ஒரு சமன்பாடு இருக்கிறது, அது படத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால், அந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் சிறந்த நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
இதையும் படிங்க: ஜூனியர் பிக்பாஸ் பதவியிலிருந்து வெளியேற நினைக்கும் முனியம்மாள் – என்ன நடந்தது?
எனக்குச் சிறந்த கலைஞர்கள் தேவைப்பட்டார்கள், அதனால்தான் மம்மூட்டி சாரையும், சாய் பல்லவி மேமையும் தேர்ந்தெடுத்தேன். அவர்கள் 100 சதவீதம் சிறந்த கலைஞர்கள்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஓம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The red redemption begins in just 9️⃣ days
#OM in theatres worldwide from November 20🥁🔥
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 11, 2026
இந்த ஓம் திரைப்படமானது ஆந்திர மற்றும் தமிழக எல்லை பகுதியில் நடக்கும் செம்மர கடத்தல் தொடர்பான கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் மம்முட்டி மற்றும் தனுஷ் இருவரும் தந்தை, மகனாக நடித்துள்ளனர். இந்த படமானது மக்கள் மத்தியில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இந்த படத்தின் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. சாய் அப்யங்கர் இதற்கு இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.