சாதிய மோதல் ஏற்பட வாய்ப்பு… கமல்ஹாசனின் சண்டியர் பட தலைப்புக்கு எதிராக காவல்துறையிடம் புகார்
Kamal Haasan Sandiyar Controversy : எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் சண்டியர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் சார்பில் திருப்பூர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், நவம்பர் 11 : எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரித்து நடிக்கும் சண்டியர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஏற்கனவே கடந்த 23 வருடங்களுக்கு முன் விருமாண்டி படத்துக்கும் முதலில் சண்டியர் என வைக்கப்பட்ட நிலையில் அப்போது அதனை கிருஷ்ணசாமி எதிர்ப்பின் காரணமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் சண்டியர் பட தலைப்புக்கு எதிராக காவல்துறையிடம் புகார்
இந்த நிலையில்’சண்டியர்’ திரைப்படத்தின் தலைப்புக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியினர் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் சண்டியர் படத்தின் தலைப்பு அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க : “ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாய இடமாற்றம்!”.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..
கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பின் சண்டியர் படத்தின் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்துக்கு முதலில் சண்டியர் என்று தான் பெயரிடப்பட்டிருந்தது. அப்போது இந்தப் படத்தின் தலைப்பால் தென் மாவட்டங்களில் கலவரம் உருவாக வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்த்தார். இதனையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கமல்ஹாசனை அழைத்து படத்தின் தலைப்பை மாற்ற உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவரது கதாப்பாத்திரத்தின் பெயரான விருமாண்டி என்ற பெயரில் படம் வெளியானது.
போஸ்டரில் இடம் பெற்ற வாசகத்தால் சர்ச்சை
இந்த நிலையில், கமல்ஹாசன் அந்தப் பட்திதன் இயக்குநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் ம.தமிழ்மணி என்பவர் திருப்பூர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில்,சண்டியர்’ என்ற பெயரில் புதிய படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் ‘Revenge can only be settled in BLOOD என்ற வன்முறையைத் தூண்டும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
இது அரசின் சட்டதிட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல், பொது வெளியில் வன்முறைக்கு வித்திடும் செயலாகும். கடந்த 2004 ஆம் ஆண்டு, இதே ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்க முயற்சி செய்த போது, அது சாதியக் குழுவை உருவாக்கும் என்று தென் தமிழகத்தில் மோதல்கள் ஏற்பட்டன. அப்போது புதிய தமிழகம் கட்சியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதா கமல்ஹாசனை அழைத்து படத்தின் பெயரை மாற்ற உத்தரவிட்டார். ஆனால், தற்போது மீண்டும் அதே பெயரில் படத்தை எடுக்க முயற்சிப்பது சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? – வானிலை மையம் எச்சரிக்கை
‘சண்டியர்’ என்ற பெயர் இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, வன்முறையை தூண்டும் இத்தகைய படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் அருண்குமார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.