Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Kamal Haasan

Kamal Haasan

உலக நாடுகளில் உள்ள அனைத்து ரசிகர்களாலும் அன்புடன் உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி பரமக்குடியில் பிறந்தார் இவர். கடந்த 1960-ம் ஆண்டு இயக்குநர் பீம் சிங் இயக்கத்தில் வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் தற்போது வரை தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். தமிழில் முன்னணி இயக்குநர்கள் பலருடன் நடிகர் கமல் ஹாசன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். 70 வயது ஆகியும் தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்குப் போட்டியாக தொடர்ந்து நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி இயக்கம், பாடல் பாடுவது, எழுதுவது என அனைத்து துறைகளிலும் தனது பெயரைப் பொறித்துள்ளார் நடிகர் கமல் ஹாசன். தமிழ் சினிமாவை உலக சினிமா தரத்திற்கு உயர்த்த இன்றும் அயராது பாடுப்பட்டு வருகிறார் நடிகர் கமல் ஹாசன்.

Read More

கமலை திடீரென சந்தித்த ஜெயம் ரவி.. என்ன விஷயம் தெரியுமா?

Ravi Mohan Invited Kamal Haasan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் வருபவர் ரவி மோகன். இவர் நடிகராக படங்களில் நடித்துவரும் நிலையில், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில், இந்த புதிய நிறுவனத்தின் தொடக்கவிழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ரவி மோகன், கமல்ஹாசனை நேரில் சென்று அழைத்துள்ளார்.

19 ஆண்டுகளை நிறைவு செய்தது கமல் ஹாசனின் வேட்டையாடு விளையாடு படம்

19 Years Of Vettaiyaadu Vilaiyaadu: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வேட்டையாடு விளையாடு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.

TVK Vijay Speech: கட்சி ஆரம்பித்த உடனே முதல்வர் ஆக முடியாது.. அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம்!

Tamil Nadu's Vijay's TVK Rally: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வெற்றிகரமாக நடைபெற்றது. தலைவர் விஜய், பாஜக மற்றும் திமுக அரசுகளை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு எதிர்வினைகளைத் தெரிவித்துள்ளனர்.

Shuti Haasan : தோல்விகளால் எனது தந்தை சோர்வடைந்ததில்லை – ஸ்ருதி ஹாசன்!

Shruti Haasan About Kamal Haasans Film Failure : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் , பாடகியாகவும் இருந்து வருபவர் ஸ்ருதி ஹசன். இவர் தனது தந்தை கமல்ஹாசன், படங்கள் தோல்விகள் குறித்து ஒருபோதும் சோர்வடைந்ததில்லை என அவர் ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Kamal Haasan Speech : நாடும் முக்கியம், தமிழ்நாடும் முக்கியம் – கமல்ஹாசன் சொன்ன விளக்கம்

திமுக கூட்டணி வைத்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் நேற்று டெல்லி கிளம்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு குறித்தும், சிபிராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

Kamal Haasan : திரைத்துறையில் 65 ஆண்டுகளை நிறைவு செய்தார் கமல்ஹாசன்!

Kamal Haasans 65 Years Of Cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கமல்ஹாசன். சினிமாவில் சிறுவயது முதலே நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் நடிப்பில் முதன்முறையாக வெளியான படம் களத்தூர் கண்ணம்மா. இப்படம் வெளியாகி இன்றோடு சுமார் 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

65 ஆண்டுகளை நிறைவு செய்தது களத்தூர் கண்ணம்மா – கமல்ஹாசனுக்காக சிறப்பு வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

65 years of Kalathur Kannamma: நடிகர் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனப் படம் களத்தூர் கண்ணம்மா. இந்தப் படம் வெளியாகி தற்போது 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தசாவதாரம் படத்தில் கமல் ஹாசனுக்கு உதவிய ஸ்ருதி ஹாசன் – என்ன செய்தார் தெரியுமா?

Shruti Haasan: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தப் படம் தசாவதாரம். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் 10 வேடங்களில் நடித்து இருந்தது ரசிகர்களை பிரமிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்ருதி ஹாசன் கமல் ஹாசனுக்கு உதவியது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு.. கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை.. என்ன மேட்டர்?

Kamal Haasan Meets PM Modi : டெல்லியில் பிரதமர் மோடியை, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் எம்.பி சந்தித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின்போது முக்கிய கோரிக்கை முன்வைத்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.

அமைதியான புரட்சி… காலம் உங்கள் பெயரை ஒளிரச் செய்யும் – சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு!

Kamal Haasan’s Heartfelt Tribute : நடிகர் சூர்யா அகரம் ஃபவுண்டேசன் துவங்கி 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவரை பாராட்டும் விதமாக நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களின் இந்த உன்னத பணிக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான் – கமல்ஹாசன்..

Kaml Hasan At Agaram: நடிகர் சூர்யாவின் அகரம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கமல் ஹாசன், சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான். இதை தவிர வேறு எதையும் கையிலெடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது என பேசியுள்ளார்.

சூர்யாவின் அகரம் விழாவில் பேசிய கமல்ஹாசன்!

நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை சார்பில் ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டாக்டர், பொறியியல் பட்டங்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் அகரம் அறக்கட்டளையில் 15வது வருட நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட கமல்ஹாசன் சூர்யாவை புகழ்ந்து பேசினார்

Suriya : கமல்ஹாசன்தான் எனது வழிகாட்டி.. மேடையில் எமோஷனலாக பேசிய சூர்யா!

Suriya About Kamal Haasan : கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் சூர்யா. இவரின் அகரம் அறக்கட்டளையில் 15வது வருட நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிலையில், அவரை பற்றி மேடையில் சூர்யா எமோஷனலாக பேசியுள்ளார். அது குறித்து விவாரமாக பார்க்கலாம்.

கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற தேசிய விருதை வென்ற பார்க்கிங் படக்குழு!

Parking Movie Crew And Kamal Haasan : தமிழ் சினிமாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பார்க்கிங். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு மட்டும் 3 தேசிய விருதுகள் கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் படக்குழுவினர் வாழ்த்துகளை பெற்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு பறந்த கார்.. நலம் விசாரிக்க நாடிய கமல்ஹாசன்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நல குறைவு காரணமாக, கடந்த 2025 ஜூலை மாத இறுதியில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.