கோலிவுட் சினிமா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்… இன்று மாலை வெளியாகிறது ரஜினி – கமல் படத்தின் அறிவிப்பு
Rajinikanth and Kamal Haasan Movie Update: ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்து இருந்த ஒரு நிகழ்வு தற்போது நடைபெற உள்ளது. ஆம் இன்று மாலை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் தொடர்பான அப்டேட் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜிக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இசையே தான் அதிக அளவில் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல் ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்பு படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி கமல் ஹாசன் தமிழ் சினிமாவில் நாயகனாக உச்சத்தில் இருக்கும் போதுதான் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். ஆம் ரஜினிகாந்த் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன போது நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து அவரது நண்பராக பலப் படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து வில்லனாக நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் படங்களுக்கு இடையே போட்டி என்று கூறும் அளவிற்கு அவர்களின் படங்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். பிறகு இருவரும் இணைந்து படங்களில் நடிப்பது நின்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து எப்போது படத்தில் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.




இன்று மாலை வெளியாகிறது ரஜினி – கமல் படத்தின் அறிவிப்பு:
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் படம் தொடர்பான அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில் இன்று மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் உடன் இணைந்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அஜித் குமார் படத்தில் நடிக்கும் நடிகர் மோகன்லால்? வைரலாகும் செய்தி!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Some stories follow the rules.
Some films rewrite them.Stay curious. Stay excited.
Next Drop 7:12 PM! #RedGiant17 ✨ pic.twitter.com/R1Goqiqxnp— Red Giant Movies (@RedGiantMovies_) February 19, 2026
Also Read… சர்வம் மாயா படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா தம்பதி… உற்சாகத்தில் படக்குழு!