Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எத்தனை வருடங்கள் ஆச்சு… இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் க்ளீன் ஷேவ் போட்டோ

Superstar Rajinikanths New Look: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பல வருடங்களாக தாடி மீசையில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது க்ளீன் ஷேவ் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எத்தனை வருடங்கள் ஆச்சு… இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் க்ளீன் ஷேவ் போட்டோ
ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Feb 2026 12:03 PM IST

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள அஜினிகாந்த் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் போதே நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப் படம் தொடர்பான அப்டேட் வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 173-வது படத்திற்காக நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை முன்னதாக சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவித்த நிலையில் அவர் படத்தில் இருந்து விலகிய காரணத்தால் அதனை டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் க்ளீன் ஷேவ் போட்டோ:

தமிழ் சினிமாவில் 75 வயது ஆகியும் தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு தனது அடுத்தப் படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் சமீபத்தில் க்ளீன் ஷேவ் செய்துள்ள போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தில்லு முல்லு படத்தில் ரஜின்காந்தை க்ளீன் ஷேவுடன் பார்த்து ரசித்த ரசிகர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பார்த்து கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் புகைப்படத்தை இணையத்தில் அதிக ஆளவில் வைரலாக்கி வருகின்றனர்.

Also Read… ரத்தம் தெறிக்க ஒரு காதலர் தின வாழ்த்து… வெளியானது டிசி படத்தின் கிளிம்ஸ் வீடியோ

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் புகைப்படம்:

Also Read… வித் லவ் படத்திற்காக அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்துப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா