Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதுதான் வெற்றியா என்று அப்பாவிடம் கேட்டேன்… நெகிழ்ந்து பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்

Soundarya Rajinikanth Emotional Speech: சூப்பர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் வித் லவ். இந்தப் படத்தின் வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்ட நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷ்னலாக பேசி உள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

இதுதான் வெற்றியா என்று அப்பாவிடம் கேட்டேன்… நெகிழ்ந்து பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்
சௌந்தர்யா ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 12 Feb 2026 18:55 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வித் லவ். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்து உள்ளார். இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக உள்ள நிலையில் தமிழில் இவர் நாயகியாக நடித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் படக்குழுவினர் ஒரு விழா ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த விழாவில் நடிகர் நடிகைகள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு படதில் தங்களது அனுபவம் மற்றும் படத்தின் வெற்றி எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது குறித்து பேசினர். இதில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதுதான் வெற்றியா என்று அப்பாவிடம் கேட்டேன்:

வித் லவ் படத்தின் ப்ரெஷ் ஷோவிற்குப் பிறகு, நான் வீடு திரும்பியதும், என் அப்பாவும் அம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னைக் கட்டிப்பிடித்தார்கள். நான் சிரித்துக் கொண்டே, “இதுதான் வெற்றியா அப்பா?” என்று கேட்டேன். அவர் சிரித்தார், இது என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் ஒரு தருணம். இது எனது முதல் வெற்றிச் சந்திப்பு, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

அபிஷன் ஜீவிந்த் என் தம்பியைப் போன்றவர். ஒரு இயக்குனராகவும், ஒரு ஹீரோவாகவும், நீங்கள் அவருக்கு அளித்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. தயவுசெய்து உங்கள் அன்பைத் தொடர்ந்து அவருக்குப் பொழியவும். மதன், இந்த கதாபாத்திரத்திற்கு அனஸ்வாரா மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று உறுதியாக நம்பியதற்கு நன்றி. அனஸ்வாரா படத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். மதன், உங்களுடன் இன்னொரு படத்தைத் தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Also Read… 4 ஆண்டுகளைக் கடந்தது விக்ரமின் மகான் படம்… கொண்டாடும் ரசிகர்கள்

இணையத்தில் வைரலாகும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பேச்சு:

Also Read… சரத்குமார் சொன்னதால்தான் தாய் கிழவி படத்தில் நடித்தேன் – நடிகை ராதிகா