சரத்குமார் சொன்னதால்தான் தாய் கிழவி படத்தில் நடித்தேன் – நடிகை ராதிகா
Radhika Sarathkumar About Thaal Kizhavi Movie: தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் தாய் கிழவி.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளாக அறிமுகம் ஆனார் நடிகை ராதிகா. தனது 15 வயதில் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன நடிகை ராதிகா தற்போது பல நூறு படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் 48 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது நாயகன்களின் அம்மாவாகவும், நாயகிகளின் அம்மாவாகவும் நடித்து வருகிறார் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தொடர்ந்து படங்களுக்காக மக்களிடையே பிரபலம் ஆனதைப் போல இவரது சொந்த வாழ்க்கைக்காகவும் மக்களிடையே பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றார்.
மேலும் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்கள் வெளியானது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பலப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தாய் கிழவி. இந்தப் படம் குறித்தும் இயக்குநர் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தாய் கிழவி படத்திற்காக இயக்குநர் 2 வருஷமா என்னை ஃபாலோ செய்தார்:
இரண்டு வருடங்களாக, இயக்குனர் சிவகுமார் என்னைத் தாய் கிழவி படத்தில் நடிக்க வைக்க துரத்தி வந்தார். ஆனால் சரத்குமார் பரிந்துரைக்கும் வரை எனக்கு ஆர்வம் இல்லை. இந்த லுக்கிற்காக கமல்ஹாசனிடமிருந்து எனக்கு சில அட்வைஸ்கள் கிடைத்தன. ஒவ்வொரு நாளும் தாய் கிழவி படத்திற்கு மேக்கப் போட 5 மணி நேரம் ஆகும், அதை அகற்ற 2 மணி நேரம் ஆகும் என்றும் அந்தப் பேட்டியில் ராதிகா சரத்குமார் தெரிவித்து இருந்தார்.
Also Read… தியேட்டரில் மாஸ் காட்டிய தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
இணையத்தில் வைரலாகும் ராதிகா சரத்குமாரின் பேச்சு:
“For 2 Years, Dir Sivakumar is chasing me to do #ThaaiKizhavi, but i was not interested until Sarathkumar suggested to do🤞. Got inputs from #KamalHaasan for the Look🤝. Everyday it’ll take 5 Hours to put makeup & it’ll take 2 Hours to remove😲”
– #Radhikapic.twitter.com/4JGZU7x2M9— AmuthaBharathi (@CinemaWithAB) February 10, 2026
Also Read… Kayadu Lohar: என்னிடம் அந்த விஷயத்தை மாற்றவேண்டும் என நினைக்கிறேன் – கயாடு லோஹர்!



