Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சர்வம் மாயா வெற்றியைத் தொடர்ந்து அதிரடி படத்தில் இணைந்த ரியா ஷிபு… வைரலாகும் போஸ்டர்

Actress Riya Shibu in Athiradi Movie: மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சர்வம் மாயா. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ரியா ஷிபு தற்போது அதிரடி படத்தில் இணைந்துள்ளார்.

சர்வம் மாயா வெற்றியைத் தொடர்ந்து அதிரடி படத்தில் இணைந்த ரியா ஷிபு… வைரலாகும் போஸ்டர்
ரியா ஷிபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Feb 2026 13:21 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கப். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் சஞ்சு வி சாமுவேல் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் மேத்யூ தாமஸ், பசில் ஜோசப் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்த நிலையில் இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ரியா ஷிபு. இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் பெரிய அளவி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து மலையாள சினிமாவில் நடித்த சர்வம் மாயா படத்தின் மூலம் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகை ரியா ஷிபு எதிர்பாராத நேரத்தில் விபத்தில் உயிரிழந்துவிடுகிறார். இவரது ஆன்மா பூமியிலேயே சுற்றி வந்த நிலையில் அது நம்பூதரி வேலை செய்யும் நிவின் பாலியின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறார். இவர் ஆன்மாவாக நிவின் பாலியின் வாழ்க்கையில் வந்தபிறகு நிவின் பாலியின் வாழ்க்கை மிகவும் அழகானதாக மாறுகிறது. மேலும் ரியா ஷிபு மற்றும் நிவின்பாலியின் அழகான உறவு மக்களிடையே கொண்டாடப்பட்டது. இந்தப் படம் கடந்த 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான பிறகு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் வசூலில் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ரியா ஷிபு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதிரடி படத்தில் இருந்து ரியா ஷிபுவின் கதாப்பாத்திர போஸ்டரை வெளியிட்ட டொவினோ தாமஸ்:

இந்த நிலையில் சர்வம் மாயா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ரியா ஷிபு அடுத்ததாக மலையாள சினிமாவில் அதிரடி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் டொவினோ தாமஸ், வினித் ஸ்ரீநிவாசன் மற்றும் பேசில் ஜோசஃப் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகை ரியா ஷிபு, ஸ்வாதி ஆர் கிருஷ்ணா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக டொவினோ தாமஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Silambarasan: அஜித் குமாரை நேரில் சந்தித்த தருணம் – நெகிழ்ச்சியாக பேசிய சிலம்பரசன்!

டொவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அடுத்தப் படம் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன மாஸ் அப்டேட்