மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பார்மா வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Pharma Web Series Review: நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியானது இணையதள தொடர். இந்த இணையதள தொடர் மெடிக்கல் உலகில் நடைபெறும் ஸ்கேம்களை மையமாக வைத்து வெளியாகியுள்ளது. இது எப்படி இருக்கிறது என்பது குறித்து விமர்சனத்தைப் பார்ப்போம்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்வம் மாயா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது பார்மா என்ற இணையதள தொடர் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த இணையதள தொடர் கடந்த 19-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. பார்மசி அதாவது மருத்து கம்பெனிகளில் நடைபெறும் ஸ்கேம்களை மையமாக வைத்து இந்த இணையதள தொடரை எடுத்துள்ளனர். இது தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதன்படி இந்த இணையதள தொடரின் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ரஜித் கபூர், நரேன், ஸ்ருதி ராமச்சந்திரன், வீணா நந்தகுமார், முத்துமணி, பினு பப்பு, நிகில் ராமச்சந்திரன், சாஃப்போய், ஸ்ருதி ஜெயன், அலேக் கபூர், அஸ்வதி மனோகரன், சித்தார்த், சந்தியா மனோஜ், ராஜேந்திரன் என்.வி என நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் தொடரை பிரபல தயாரிப்பு நிறுவனமான மூவி மில் சார்பாக தயாரிப்பாளர் கிருஷ்ணன் சேதுகுமார் தயாரித்து இருந்தார்.
பார்மா வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
பிரபல பார்மசிட்டிகல் நிறுவனத்தில் மெடிக்கல் ரெப்ரசண்டிவாக வேலைக்கு சேர்வார் நிவின் பாலி. இவர் ட்ரெய்னியாக அறிமுகம் ஆன போது டார்க்கெட்டை முடிக்காமல் அவரது மேனேஜரிடம் திட்டுவாங்கிக்கொண்டே இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அவர் வேலை செய்யும் நிறுவனம் புதிதாக மருந்து ஒன்றை அறிமுகம் செய்கிறது.




Also Read… டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சாண்ட்ராவை கடுப்பேத்தும் கம்ருதின் மற்றும் பார்வதி – வைரலாகும் வீடியோ
கர்பிணி பெண்கள் அந்த மருத்தை உண்ணும் போது குழந்தைக்கு ஆரோக்யம் என்று மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் தனது பேச்சு திறமையால் இந்த மருத்தை மருத்துவர்களிடம் பேசி அதிக அளவில் விற்பனை செய்து கம்பெனியில் சிறந்த எம்லாயி என்று அவார்ட் வாங்குகிறார். இப்படி இருக்கும் சூழலில் ஒரு நாள் அந்த மருத்தை கம்பெனி நிறுத்தியதால் இவரின் பணியிலும் தொய்வு ஏற்படுகிறது.
அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மருந்து சாப்பிட்டு பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் பிறக்கும் போது சக்கரை நோய் பாதிப்புடன் பிறந்ததை மருத்துவர் ஒருவர் கண்டறிகிறார். அந்த மருத்துவர் நிவின் பாலியிடம் இந்த பிரச்னையை கூற நிவின்பாலி தனது கம்பெனிக்கு எதிராகவே வழக்கு போட்டு வாதாடுகிறார். இறுதியில் இவர்களின் வழக்கு வெற்றிப் பெற்றதா இல்லையா என்பதே இந்த தொடரின் கதை.
Also Read… 27 தியேட்டர்தான் கொடுத்தாங்க.. தமிழ் சினிமா சாகும்.. கொதித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!