AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த 4 விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் சிக்கல்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Four Things You Should Not Have In Your Smartphone | தற்போதைய காலக்கட்டத்தில் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். ஆனால், உங்களது ஸ்மார்ட்போனில் இந்த 4 விஷயங்கள் இருந்தால் உங்களுக்கு மிக கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த 4 விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் சிக்கல்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Feb 2026 20:58 PM IST

ஸ்மார்ட்போன் (Smartphone) மனிதர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. தற்போதைய சூழலில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. செயலிகள் (Apps), சமூல வலைத்தளங்கள் (Social Medias) மூலம் தங்களது பெரும்பாலான தேவைகளை மக்கள் ஸ்மார்ட்போன்களை வைத்து பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். ஸ்மார்ட்போன் ஒருவரின் தனிபட்ட தேவைக்கானது என்றாலும், அதில் இந்த நான்கு விஷயங்கள் இருக்கும் பட்சத்தில் அது உங்களை சிக்கலில் சிக்க வைத்துவிடும். எது என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆபத்தான மற்றும் சட்டவிரோத வீடியோக்கள்

இந்திய அரசியல் சாசனத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பது, சேமிப்பது அல்லது அவற்றை பிறருக்கு பகிர்வது ஆகிய செயல்களை செய்தால் ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழங்கப்பதிவு செய்யப்பட்டு தண்டனை பெற நேரிடும். அத்தகைய வீடியோக்களை வேறு ஒருவர் உங்களுக்கு அனுப்பினார், நீங்கள் அதனை பார்க்கவில்லை என்றாலும் கூட அந்த வீடியோ உங்களது கேலரியில் இருப்பதன் காரணமாகவே நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்.

இதையும் படிங்க : மிக குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது ரியம்லி பி4 லைட் 4ஜி!

போலி ஆவணங்கள் மற்றும் ஹேக்கிங் செயலிகள்

உங்களது ஸ்மார்ட்போனில் போலி ஆவணங்கள், அங்கீகரிக்கப்படாத ஐடிகள் மற்றும் சட்ட விரோத ஹேக்கிங் செயலிகள் ஏதேனும் இருந்தால் அது சட்டப்படி குற்றமாக கருதப்படும். இத்தகைய குற்றங்களுக்காக உங்களை கைது செய்யும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

வதந்திகள் மற்றும் வெறுப்பு பேச்சு

சமூக வலைத்தளங்களில் மத கலவரத்தை தூண்டும் விதமான கருத்துக்களை பகிர்வது, சாதிய ரீதியான பேச்சுக்கள் ஆகியவற்றை பகிர்வது சட்டப்படி குற்றமாகும். அவை சைபர் டெரரிசம் (Cyber Terrorism) கீழ் வரும். இதன் காரணமாக உங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாதி, மத ரீதியிலான அவதூறு பேச்சுக்கள் நாட்டின் இறையான்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கும் வீடியோக்களை ஸ்மார்ட்போனில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது.

இதையும் படிங்க : அச்சு அசல் மனிதர்களை போலவே ஸ்டண்ட், நடனம் செய்த ரோபோக்கள்!

தடை செய்யப்பட்ட மற்றும் ஸ்பை செயலிகள்

அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட செயலிகள் அல்லது பிறரின் போனை உளவு பார்க்க கூடிய ஸ்பை செயலிகள் ஆகியவற்றை உங்களது ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் அதுவும் தண்டனைக்குறிய குற்றமாகும்.