தமிழ்நாட்டில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர். ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற பெயரில் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை பகுதியில், அஜித்தின் ரசிகர்கள் மற்றும் தீவிர ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு கட்சியை முறைப்படி தொடங்கியுள்ளனர். இதையடுத்து கட்சியின் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.