Jailer 2: என்னப்பா ரெடியா..? ஐமேக்ஸ் தரத்தில் திரையரங்குகளில் வெளியாகும் ஜெயிலர் 2..!
Jailer 2 On IMAX: தென்னிந்திய சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் அதிகமாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் இப்படம் ஐமேக்ஸ் தரத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்துவரும் மிக பிரம்மாண்டமான திரைப்படங்களிளில் ஒன்று ஜெயிலர் 2 (Jailer 2). இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) ஹீரோவாக நடிக்க, அவருடன் பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது, 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 (jailer 1) படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது.
இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஐமேக்ஸ் (IMAX) தரத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ள நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ரவுண்டுகட்டி அடிக்கும் போட்டியாளர்கள்.. திணறும் தான்யா – வைரலாகும் புரோமோ!
ஜெயிலர் 2 திரைப்படமானது ஐமேக்ஸ் தரத்தில் வெளியாக காத்திருப்பதாக படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#Jailer2 is coming to take over IMAX screens worldwide from Oct 15th! 🔥🌟 @IMAX@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani… pic.twitter.com/tvI1i37clK
— Sun Pictures (@sunpictures) October 1, 2026
ஜெயிலர் 2 படத்தின் சென்சார் அப்டேட்:
இந்த ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இப்படம் கிட்டத்தட்ட ரூ 350 முதல் ரூ 400 கோடி பட்ஜெட்டில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் இப்படத்தில் மொத்தமாக 12 பாடல்களும் உள்ளதாம். இந்த படத்திற்கு பான் இந்திய அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஃபகத் ஃபாசிலின் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு
அதன்படி இந்த ஜெயிலர் 2 படத்திற்காக, தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது. படத்தில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு சாப்பாட்டு மேஜையில் வைக்கப்படும் காட்சி ஒன்று உள்ளது. அந்தக் காட்சியை அவர்கள் வைத்திருக்க விரும்பினால், படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்படும். அதை நீக்கினால், யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகிவருகிறது. விரைவில் இந்த படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது, மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



