AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரவுண்டுகட்டி அடிக்கும் போட்டியாளர்கள்.. திணறும் தான்யா – வைரலாகும் புரோமோ!

Bigg Boss Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் கிட்டத்தட்ட 25 நாட்களை இந்நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது பிபி ஹோட்டல் டாஸ்க் நடந்துவரும் நிலையில், அதில் தன்யாவை அடுத்தடுத்து மற்ற போட்டியாளர்கள் தாக்கும் புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரவுண்டுகட்டி அடிக்கும் போட்டியாளர்கள்.. திணறும் தான்யா – வைரலாகும் புரோமோ!
பிக் பாஸ் புரோமோ Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Oct 2026 16:48 PM IST

விஜய் டிவியில் பிரபல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், கிட்டத்தட்ட 25 நாட்களாகியுள்ளது. அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிபி ஹோட்டல் (BB Hotel Task) என்ற டாஸ்க் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது தான்யா, ஜாவித் மற்றும் அஸ்மிதா சாவன்யா போன்ற போட்டியாளர்கள் ந்த டாஸ்கில் இருகிறார்கள்.

அந்த விதத்தில் குக்கிங் டீமில் தன்யா மற்றும் ஜாவித் இருவரும் இருக்கும் நிலையில், தன்யாவை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்து அவரை அடுத்தடுத்து தாக்கி பேசிவருகிறார்கள் இருந்தும் மனம்தளராத தன்யா அந்த டாஸ்கில் மேலும் நீடித்துவருகிறார்.

இதையும் படிங்க: மணிரத்னம் இயக்கத்தில் அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை – விஜய் சேதுபதி

தன்யாவை டார்கெட் செய்து அடிக்கும் போட்டியாளர்கள்:

தன்யா மற்றும் ஜாவித் இருவரும் கயிற்றினால் பிணைக்கப்பட்டு இருக்கும் நிலையில், குக்கிங் அணியில் இவர்கள் இருவர்தான் சமைத்து வருகிறார்கள். அந்த விதத்தில் சமையல் செய்து மற்ற போட்டியாளர்களுக்கு வழங்கும் நிலையில், முனியம்மாள் முதல் மற்ற போட்டியாளர்கள் தன்யாவை டார்கெட் செய்து பேசிவருகிறார்கள். தற்போது வெளியான புரோமோ ஒன்றில், தன்யா தனது கையில் இருந்த சாப்பாட்டை தெரியாமல் கீழே கொட்டிவிடுகிறார்.

இதையும் படிங்க: பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்… டோரதி படம் குறித்து பாராட்டிய பேசிய நடிகர் சூர்யா!

அதை சுத்தம் செய்ய க்ளீனிங் அணியை அழைத்த நிலையில், லக்ஷ்மி பிரியா உடனே, நீங்கள்தான் அதை க்ளீன் செய்யவேண்டும் என கூறுகிறாரே. அவர் க்ளீன் செய்யும்போது அன்சர், தன்யாவை கோபமாக திட்டிவிடுகிறார். இது குறித்த புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 25வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த நிகழ்ச்சியில் தற்போது பிபி ஹோட்டல் என்ற டாஸ்க் இருக்கும் நிலையில், அந்த டாஸ்கின் ஹெட்டாக லக்ஷ்மி பிரியா இயக்கிறார். மேலும் அவரின் கீழ் சாவன்யா. அஸ்மிதா, ஜாவித் மற்றும் தன்யா போன்ற போட்டியாளர்கள் இருகிறார்கள். இவர்கள் 5 பேர் மற்ற போட்டியாளர்களுக்கான எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். இதுபோன்ற டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சியானது நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியிலும் சிறப்பாக வரவேற்பை பெற்றுவருகிறது.

Follow Us