மணிரத்னம் இயக்கத்தில் அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை – விஜய் சேதுபதி
Vijay Sethupathi | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. மேலும் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில் மணிரத்னம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத சின்ன சின்ன வேடங்களில் நடித்தன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் நடிகர் விஜய் சேதுபதி. பல முன்னணி நடிகர்களின் படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த இவர் தனது கடின உழைப்பின் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் மட்டும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் பிசியாக உருவாகி வருகின்றது. அது மட்டும் இன்றி அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பத்தா படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேங்ஸ்டராக நடித்து உள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவரது படம் குறித்தும் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




மணிரத்னம் இயக்கத்தில் அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை:
மணிரத்னம் இயக்கத்தில் ஒரு காதல் காட்சியில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. அவரது காட்சி அமைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும்; அவர் காதலை மிக அழகாக வெளிப்படுத்துபவர். என் வாழ்நாளில் ஒருமுறையாவது அது நடக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். இப்போது இஞ்சி வெள்ளம் படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.
எல்லாம் எவ்வளவு தூரம் வந்துள்ளது என்பதையும், இது உண்மையில் நிகழ்வதையும் நினைத்துப் பார்க்கும்போது ஒரு அதிசயம் போலத் தோன்றுகிறது. பத்தா விற்பனையானது, பாலிவுட் படங்களில் நடித்தது மற்றும் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பது என அனைத்தும்… குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தெரிவித்துள்ளார்.
Also Read… 4 ஆண்டுகளைக் கடந்தது பொன்னியின் செல்வன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
My long-day wish was to do romance in a #ManiRatnam movie. I love his staging, he is a big fan of love ♥️ . He presents love so beautifully. I’ve always wished for it to happen at least once in my life, and now it has happened with #InjiVellam.
When I think about how far things…
— Movies Singapore (@MoviesSingapore) September 30, 2026
Also Read… ஏழு கடல் ஏழு மலை முதல் சிக்மா வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!