AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

4 ஆண்டுகளைக் கடந்தது பொன்னியின் செல்வன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்

4 Years Of Ponniyin Selvan Movie | தமிழ் சினிமாவில் காவியமாக கொண்டாடப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதனை தற்போது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளைக் கடந்தது பொன்னியின் செல்வன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்
பொன்னியின் செல்வன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Sep 2026 16:54 PM IST

பான் இந்திய மொழிகளில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இவர் கன்னட மொழியில் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்தாலும் அதிக அளவில் தமிழ் மொழியிலே படங்களை இயக்கி உள்ளார். அது மட்டும் இன்றி மற்ற பான் இந்திய மொழிகளிலும் இயக்குநர் மணிரத்னம் படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தற்போது தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் இஞ்சி வெல்லம் என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். தொடர்ந்து அந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் இலக்கியத்தில் மக்களால் போற்றப்படும் ஒரு காவியமாக உள்ளது பொன்னியின் செல்வன். இந்த கதையை படமாக்க வேண்டு என்று தமிழ் சினிமாவில் பலர் முயற்சி செய்த நிலையில் அதனை படமாக்கி காட்டினார் இயக்குநர் மணிரத்னம். அதன்படி இந்த காவியத்தை இரண்டு பாகங்களாக இயக்குநர் மணிரத்னம் உருவாக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று படம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read… விஜய் டூ சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை.. இந்த சிறுமி யாரு தெரியுமா?

4 ஆண்டுகளைக் கடந்தது பொன்னியின் செல்வன் படம்:

இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் பொன்னியின் செல்வனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா கிருஷ்ணன், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, சோபித துலிபால, ஜெயராம் மற்றும் பிரகாஷ் ராஜ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப்  போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… பிக்பாஸில் அஸ்மிதா – சாவன்யா இடையே அதிகரிக்கும் மோதல்… வைரலாகும் வீடியோ

Follow Us