Dharman: தர்மன் படத்தில் ராம் போதினேனி உறுதி.. நடிகை ராஷி கண்ணா இன்ஸ்டா பதிவு வைரல்!
Dharman Movie Update: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 173வது திரைப்படம்தான் தர்மன். இந்த படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இதில் தெலுங்கு நடிகர் ராம் போதினேனி இணைத்துள்ளது குறித்த பதிவு வெளியாகியுள்ளது. இதை நடிகை ராஷி கண்ணா பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இவரின் இயக்கத்தில் இதுவரை ஓ மை கடவுளே (Oh My Kadavule) மற்றும் டிராகன் (Dragon) என இரு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த இரு படங்களும் இவருக்கு மாஸ் வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் 3வது இவர் இயக்கும் திரைப்படம்தான் தர்மன் (Dharman). ரஜினிகாந்தின் (Rajinikanth) இந்த படமானது தலைவர் 173 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் தர்மன் என இப்படத்தின் டைட்டில் மாற்றப்பட்டிருந்தது. இந்த படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ராம் போதினேனி (Ram Pothineni) நடிப்பதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவந்தது. அந்த விதத்தில் இப்படத்தில் ராம் போதினேனி இருப்பதாய் நடிகை ராஷி கண்ணா உறுதி செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்த பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ரெடியா?.. ஜெயிலர் 2 படத்தின் பேக் டூ பேக் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்தில் ராம் போதினேனி இணைந்தது குறித்து வைரலாகும் பதிவு:
Rajinikanth’s #Dharman shooting is currently progressing at a brisk pace in a temple in Mysore.
The team is filming scenes featuring #Rajinikanth, #RaashiKhanna, and #RamPothineni. Director is shooting the film at a fast pace, and Dharman is expected to release for Pongal 2027. pic.twitter.com/za0TFbOUfG
— Movie Tamil (@_MovieTamil) September 29, 2026
இந்த தர்மன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவராக நடித்துவருகிறார். பல ஆண்டுகளாக இவர் இந்த வேடத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தர்மன் படத்தின் ஷூட்டிங் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் முக்கியமான வேடத்தில் நடிகை ராஷி கண்ணா நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: ஸ்ரீ ராமரின் அவதாரம்.. ரன்பீர் கபூரின் ராமாயணா படத்தின் BTS வீடியோ வெளியீடு!
அந்த விதத்தில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் போதினேனி வில்லனாக நடித்துவருகிறாராம். இது இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமையும் என கூறப்படுகிறது. தற்போது இவரும் தர்மன் படத்தில் இருக்கும் நிலையில், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகவுள்ளது. ராம் போதினேனி மற்றும் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.