ஆடியோ லான்ச் இல்லையா? ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முழு ஆல்பம் எப்போது வெளியாகும்?
Jailer 2 Album Update: தென்னிந்திய சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் அதிகமாக மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் ஜெயிலர் 2. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முழு ஆல்பம் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி (Coolie). கடந்த 2025ம் ஆண்டில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 172வது திரைப்படமாக உருவாகிவந்ததுதான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியுள்ள நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichandar) இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ஆடியோ லான்ச் எப்போது இருக்கும் என எதிர்பார்ப்புகள் உள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் முழு ஆல்பம் முழுவதும் எப்போது வெளியாகும் என படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: கவின் – நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!
ஜெயிலர் 2 படத்தின் முழு ஆல்பம் ரிலீஸ் அப்டேட்:
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் ரஜினிகாந்தின் கூட்டணியில் 2வது உருவாகியுள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த படமானது 2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தின் முழு ஆல்பம் எப்போது வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நானும் சூர்யாவும் இணையும் படம் எப்படி இருக்கும் தெரியுமா? இயக்குநர் ராஜமௌலி சொன்ன விசயம்
ஜெயிலர் 2 படத்தின் ராவே மற்றும் முழு ஆல்பம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியில் வெளியாகும் என படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஜெயிலர் 2 படத்தின் ஃபுல் ஆல்பம் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
A Musical Rampage is about to hit you all⚡ #Jailer2 RAVE and FULL ALBUM drop on September 30 🎺💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza… pic.twitter.com/xGndxGhHhh
— Sun Pictures (@sunpictures) September 28, 2026
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல்வேறு பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் பான் இந்திய மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ள நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.