AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நானும் சூர்யாவும் இணையும் படம் எப்படி இருக்கும் தெரியுமா? இயக்குநர் ராஜமௌலி சொன்ன விசயம்

SS Rajamouli talks about working with Suriya | தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜமௌலி. இவர் சமீபத்தில் பட விழாவில் கலந்துகொண்டு பேசிய போது சூர்யா உடன் இணையும் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நானும் சூர்யாவும் இணையும் படம் எப்படி இருக்கும் தெரியுமா? இயக்குநர் ராஜமௌலி சொன்ன விசயம்
சூர்யா - மற்றும் ராஜமௌலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Sep 2026 15:20 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் வாரணாசி. பீரியட் ட்ராமா ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த வாரணாசி படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி படங்களை தயாரிப்பது மற்றும் வெளியிடுவதையும் செய்து வருகிறார். இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக வெளியிட உள்ள படம் டோண்ட் ட்ரபிள் த ட்ரபிள். இது நடிகர் ஃபகத் பாசில் நாயகனாக நடித்துள்ள ஃபேண்டசி ட்ராமா படமாகும். இந்தப் படத்தின் புரமோஷன் விழாவில் கலந்துகொண்டு பேசிய எஸ்.எஸ்.ராஜமௌலி நடிகர் சூர்யா உடனான தனது படம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

நானும் சூர்யாவும் இணையும் படம் எப்படி இருக்கும் தெரியுமா?

அதில் அவர் கூறியதாவது, இந்த நிகழ்ச்சிக்கு சூர்யா வந்தது மிகவும் சிறப்பான விஷயம். சில சமயங்களில் அவரை ‘சார்’ என்று அழைக்கவே முடிவதில்லை. ஏனென்றால், பார்ப்பதற்கு அவருக்கு 30 வயது கூட ஆகாதது போல் தோன்றுகிறது. அவரை எப்படி ‘சார்’ என்று அழைப்பது? அவரது தூய உள்ளம் அவர் முகத்திலேயே தெரிகிறது. டோண்ட் ட்ரபிள் த ட்ரபிள் படத்திற்கான அவரது வாழ்த்துகள் இப்படத்தை மேலும் சிறப்பாக்குகின்றன.

அவருடன் நான் தொடர்ந்து பணியாற்றுவது குறித்த இந்தக் கேள்வி எழும் என்பதை நான் எதிர்பார்த்திருந்தேன.; அதற்கான பதிலுடனும் தயாராகவே வந்திருந்தேன். முதலாவதாக, டோண்ட் ட்ரபிள் த ட்ரபிள் படத்தை விளம்பரப்படுத்தவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். சூர்யாவைப் பற்றி நான் ஏதேனும் பேசினால், அதுவே முக்கியச் செய்தியாகிவிடும். அதனால் படம் பின்னணிக்குத் தள்ளப்பட்டுவிடும். நாங்கள் இணைந்து படம் செய்யும்போது, ​​அது நிச்சயம் மிகச் சிறப்பானதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Sigma: சிக்மா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Vishal: விஷாலின் புருஷன் பட கிளைமேக்ஸ் சண்டை காட்சி விபத்து – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Follow Us