AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sigma: சிக்மா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

Sigma Tamil Nadu release Rights: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவர் சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் பட ஷூட்டிங்கில் இருக்கிறார். இதன் கிளைமேக்ஸ் காட்சியின்போது விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Sigma: சிக்மா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!
சிக்மா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Sep 2026 11:02 AM IST

இளம் இயக்குநராக தனது முதல் திரைப்படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவருபவர்தான் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் சிக்மா (Sigma). இந்த படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) இணைந்து நடித்துள்ளார். இதில் ஃபரியாவுக்கு முதல் தமிழ் திரைப்படமாக இந்த சிக்மா அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்மா படத்தின் புரோமோஷன் பணிகளானது மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இதன் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை எந்த நிறுவனம் வாங்கியுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதன் பட்ஜெட் குறித்தும் தகவல் பரவிவருகிறது.

இதையும் படிங்க: மேடி படத்தில் எனது கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் – ரியோ ராஜ் பேச்சு!

ஜேசன் சஞ்சய்யின் சிக்மா பட தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்:

மக்கள் மத்தியில் சிக்மா படமானது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரித்திருக்கும் நிலையில், இதன் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்ரீ சக்தி சினிமாஸ் என்ற நிறுவனமானது கைப்பற்றியுள்ளது. இந்த உரிமைகளுக்காக கிட்டத்தட்ட 30 கோடிகளுக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: காதல் என்று வரும்போது, ​​பொருத்தத்தை விட ஈர்ப்பு மேலோங்குமா? இணையத்தில் வைரலாகும் #லவ் பட ட்ரெய்லர்!

சிக்மா திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்து படக்குழு பகிர்ந்த பதிவு:

இந்த படமானது பணக்கொள்ளை மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சந்தீப் கிஷன் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியாக காத்திருக்கும் நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us