ஷமாவின் ஸ்டாம்ப் டாஸ்க் விவகாரம்.. ஜேசனை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி – புரோமோ இதோ!
Vijay Sethupathi And Jason confrontation: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று (26/09/2026) வார இறுதியான நிலையில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஸ்டாம்ப் டாஸ்க் பிரச்சனை குறித்து ஜேசனை வெளுத்து வாங்கியுள்ளார். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தை வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக இருந்து தொகுத்துவருகிறார். இவரின் இந்த நிகழ்ச்சியானது விஜய் டிவியில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 3 வது வாரத்தின் இறுதியில் உள்ளது. அந்த விதத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் சீசன் 10ல் முயல் காஸ்ட்யூம் அணிந்து, ஸ்டாம்ப்பை முதுகில் குத்தும் டாஸ்க் நடைபெற்றிருந்தது.
அதில் ஷமாவின் ஸ்டாம்ப்பை ஜேசன் சும்மிங்பூலில் தூக்கி வீசிய நிலையில், அந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி விசாரித்துள்ளார். தற்போது இது தொடர்பாக அவர் ஜேசனிடம் அடுக்கடுக்கான கேள்வியை கேட்டுள்ள நிலையில், அது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: எனக்குதான் ரோஷமே இல்ல.. போட்டியாளர்களிடம் கடுப்பான விஜய் சேதுபதி – புரோமோ இதோ!
ஜேஸனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய் சேதுபதி:
அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, ஷமாவிடம் கேள்வியை கேட்டிருந்தார். பின் ஜேஸனிடம் வந்த அவர், “ஷமாவுடைய ஸ்டாம்ப்பை எடுத்து சும்மிங்ப்பூலில் தூக்கி வீச அவசியம் என்ன?” என கேள்வி கேட்டிருந்தார். உடனே பேசிய ஜேசன், “அவங்க என்னை அடித்திவிடுவார் என்றுதான்” என சொன்னார். உடனே பேசிய விஜய் சேதுபதி, “அவர் உங்களை முதுகில் குத்திவிடுவார் என்றுதானே இதை செஞ்சீங்க..?” என கேட்டார்.
இதையும் படிங்க: ஒருமணி நேரமாக தூக்கம் வரவில்லை.. விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பற்றி பேசிய சிவராஜ்குமார்!
அதன் பிறகு பேசிய ஷமா, “அந்த இடத்தில் என்னை யாராவது தாக்க வந்தால், அவர்களை திருப்பி அடக்கமுடியாத இடத்தில் நான் இருந்தேன் சார்” என கூறினார். இதற்கு ஜேசன் வித்தியாசமாக ரியாக்ஷன் கொடுத்தார். அதற்கு விஜய் சேதுபதி, “சார் நீங்க நல்ல புத்திசாலி சார், என்ன டேக்கில் பண்ணிறிங்களா?” என கடுப்பாகி அடுத்தடுத்து ஜேசனிடம் வாக்குவாதத்தில் விஜய் சேதுபதி ஈடுபட்டிருந்தார்.
ஜேசனிடம் விஜய் சேதுபதி விசாரித்தது தொடர்பான புரோமோ:
#Day20 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/B2SVCr90yg
— Vijay Television (@vijaytelevision) September 26, 2026
இந்த நிகழ்ச்சியானது 20 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்ட நிலையில், ஆனந்தியும் குடும்ப பிரச்சனையின் காரணமாக இந்நிகழ்ச்சியிலிருந்து விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.