AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனக்குதான் ரோஷமே இல்ல.. போட்டியாளர்களிடம் கடுப்பான விஜய் சேதுபதி – புரோமோ இதோ!

Vijay Sethupathi Bigg Boss: மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 3வது வாரத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில், இன்று (26/09/2026) போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடம் கோபப்படுவது குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.

எனக்குதான் ரோஷமே இல்ல.. போட்டியாளர்களிடம் கடுப்பான விஜய் சேதுபதி – புரோமோ இதோ!
பிக் பாஸ் சீசன் 10 புரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Sep 2026 17:13 PM IST

தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிழச்சியானது மக்கள் மத்தியில் பல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெறுகிறது. 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுக்கும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 19 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி என இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், இதுவரை மொத்தமாக 4 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 3 வாரத்தை கடக்கவுள்ள நிலையில், 3வது வாரத்தின் இறுதியான இன்று (26/09/2026) விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கமே. அந்த விதத்தில் போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபத்தில், அவர்களிடையே கோபப்பட்டது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?

போட்டியாளர்களிடையே கோபப்பட்ட விஜய் சேதுபதி குறித்த புரோமோ பதிவு:

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, போட்டியாளர்களுக்கு, ஒரு கிண்ணம் நிறையாக உப்பை கொடுத்து, இந்த வீட்டில் யாருக்குமே ரோஷமே இல்லையோ அவர்களுக்கு கொடுங்கள் என கூறியிருந்தார். உடனே முனியம்மாள், “நான் ராகவன் அண்ணாவை சொல்லுவேன்”, என அவருக்கு உப்பை கொடுத்திருந்தார். அதன் பிறகு எழுந்த ஜேசன், “நானும் ராகவ் அண்ணாவுக்கு கொடுக்கிறேன்” என்கிறார். உடனே விஜய் சேதுபதி, “நிறுத்துங்க.. மற்ற யாருக்குமே ரோஷமே வராதா?” என கூறினார். அதன் பிறகு எழுந்த முத்தழகி, “நானும் முதலில் ராகவ் அண்ணாவுக்குத்தான் கொடுப்பேன்” என கூறினார்.

இதையும் படிங்க: லீடர் எக்ஸிட் மூலம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய லக்‌ஷ்மி பிரியா… அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் – நேற்று நடந்தது என்ன?

உடனே கோபப்பட்ட விஜய் சேதுபத்தில், “நீங்க யாருக்குமே உப்பு கொடுக்கவேண்டாம் உட்காருங்க” என்றார், அதன் பிறகு முத்தழகி, “வேறு யாருக்காவது கொடுக்கலாமா சார்?” என கேட்டிருந்தார். உடனே விஜய் சேதுபதி, “எனக்கு கொடுங்க, என் பெற சொல்லு குடுங்க, எனக்குத்தான் ரோஷமே இல்ல, உக்காந்து உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் லா” என கோபத்தை பேசியிருந்தார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

Follow Us