AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?

Big Boss 10 Anandi Evicted: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி தற்போது 3வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நேற்று லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், மேலும் இன்று (26/09/2026) இதிலிருந்து ஆனந்தி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?
பிக் பாஸ் ஆனந்தி வெளியேற்றம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Sep 2026 15:39 PM IST

தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மொத்தமாக கிட்டத்தட்ட 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியில் மொத்தமாக 15 போட்டியாளர்கள் மட்டுமே இருகிறார்கள். கடந்த சில நாட்களில் பிளாக் பாண்டி, மணிவண்ணா, ஜாவித் மற்றும் லக்ஷ்மி பிரியா என மொத்தம் 4 போட்டியாளர்கள் வெளியேறியிருந்தனர். அதிலும் நேற்று (25/09/2026) லீடர் எக்சிட் லிஸ்ட் மூலமாக லக்ஷ்மி பிரியா (Lakshmi Priya) வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அவரின் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீடு ஒரே கலவரமாகாவே இருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் நோ எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியிலிருந்து ஆனந்தி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அதற்கான விவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சிக்கலாம்.. தி பாரடைஸ் படத்திற்கு ரசிகர்களின் ரியாக்ஷன் குறித்து நானி!

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேரினாரா ஆனந்தி:

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லீடர் எக்சிட் லிஸ்டில் லட்சுமி பிரியா ஆனந்தி மற்றும் முத்தழகி என மூன்று போட்டியாளர்கள் இருந்த நிலையில் , இதில் நூலிழையில் ஆனந்தி தப்பித்திருந்தார். அந்த விதத்தில் தற்போது அவரும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது.

இதையும் படிங்க: மலையாள சினிமாவை தெறிக்கவிடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியிலிருந்து ஆனந்தி, தனது சொந்த பிரச்சனையின் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளாராம். ஆனந்தியின் தந்தை இறந்த காரணத்தினால் ஆனந்தி இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளாராம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் தீவிரமாக பரவிவருகிறது. மேலும் அவரின் ரசிகர்கள் இதை வருத்தத்துடன் பகிர்ந்துவருகிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 10ல் இருந்து ஆனந்தி வெளியேறியதாக இணையத்தில் பரவும் பதிவு:

இவ்வாறே ஆனந்தி இந்த வீட்டிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக தற்போது வெறும் 14 போட்டியாளர்கள் மட்டுமே இருகிறார்கள். அதன் காரணமாக 4வது வாரத்தின் தொடக்கத்திலே இரு வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போட்டியாளர்கள் யார் யார் என இனிமேல்தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us