குரூப்பிஸம் இல்லையா இங்க.. லக்ஷ்மி பிரியாவின் வெளியேற்றத்தால் வீட்டின் தலைவரை அடிக்கும் போட்டியாளர்கள் – தீயாய் பரவும் புரோமோ!
Sathika - Muthazhagi Confront Avinash Ashok: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 3வது வாரத்தில் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் வீட்டின் லீடர் மற்றும் போட்டியாளர்களின் வாக்குகளின் காரணமாக லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுள்ளார். அந்த விதத்தில் அவரின் வெளியேற்றத்திற்காக சாதிகா மற்றும் முத்தழகி இருவருமே வீட்டின் தலைவர் அவினாஷை கடுமையாக சாடும் புரோமோ வெளியாகியுள்ளது.
2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தமிழில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விஜய் டிவியில்(Vijay Tv) தினமும் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் அதிகம் டிஆர்பி ரேட்டிங்கை பெரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருக்கிறது. அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 2 வாரங்களை கடந்த நிலையில், தற்போது 3வது வாரத்தின் இறுதியில் உள்ளது. அந்த வகையில் இந்த வாரத்தின் வீட்டின் தலைவரின் தேர்வினாலும், சக போட்டியாளர்களின் வாக்கினாலும் லக்ஷ்மி பிரியா (Lakshmi Priya) வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவரின் வெளியேற்றமானது அவரின் நண்பர்களான சாதிகா மற்றும் முத்தழகி என இருவரிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீட்டின் தலைவரான அவினாஷ் அசோக்கை தனது வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர். இது தொடர்பான புரோமோ இணையத்தில் தீயாக வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நம்ம மண்ணின் கதை.. D56 படம் குறித்து பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 19வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day19 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/tdl9ddiqyV
— Vijay Television (@vijaytelevision) September 25, 2026
இன்று (25/09/2026) பிக் பாஸ் சீசன் 10ல் இருந்து லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் ஜாவித் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது லக்ஷ்மி பிரியா லீடர் எக்சிட் லிஸ்ட் மூலமாக வெளியேற்றப்பட்டிருந்தார். அந்த விதத்தில் இவரின் வெளியேற்றத்தை தாங்கிக்கொள்ளாத சாதிகா மற்றும் முத்தழகி இருவரும், வீட்டின் தலைவர் அவினாஷை திட்டி தீர்த்துவருகிறார்கள்.
இதையும் படிங்க: 90ஸ் கிராமப்புற கேங்ஸ்டர் மசாலா.. மீண்டும் கோட்டை விட்டாரா கார்த்திக் சுப்புராஜ்? டோரதி படம் எப்படி இருக்கு?
மேலும் ஒரு லீடயராக நடுநிலை இல்லாமல், குரூப்பிஸம் செய்கிறார் என அவரை திட்டி தீர்த்துவருகிறார்கள் இதை கேட்டும் கேட்காமல் இருக்கும் அவினாஷ், பெட் ரூமில் தனது படுக்கையின் பக்கத்தில் இருந்து கண்ணீர் சிந்துவதுபோன்ற காட்சிகள் இந்த புரோமோவில் உள்ளது.
பிக் பாஸ் சீசன் 10ல் 3வது வார எவிக்ஷன் லிஸ்ட்:
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 3வது வாரத்தின் எவிக்ஷன் லிஸ்டில், அன்சர், ஆனந்தி, சாந்தினி, தான்யா பல்லத், முனியம்மாள், ராகவ் மற்றும் ஷமா போன்ற போட்டியாளர்கள் உள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரத்தில் இவர்களில் யார் வெளியேற்றப்படுவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த விதத்தில் இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டால் ஷமா அல்லது ஆனந்தி இருவரில் ஒருவர் செல்ல வாய்ப்பு உள்ளதாம். அல்லது இந்த வாரத்தில் நோ எவிக்ஷன் இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது..