AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உனக்காக விளையாடியது மட்டும்தான் ஒரே தப்பு.. வீட்டை விட்டு வெளியேறுமுன் அவினாஷை கரித்துக்கொட்டிய லக்ஷ்மி பிரியா!

Lakshmi Priya And Avinash Confrontation: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் 3வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இந்த வாரம் லீடர் எக்சிட் லிஸ்ட் மூலம் லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுள்ளார். அந்த விதத்தில் அவர் இந்த வீட்டின் தலைவர் அவினாஷ் அசோக்கை திட்டியது தொடர்பான புரோமோ வெளியாகி வைரலாகிவருகிறது.

உனக்காக விளையாடியது மட்டும்தான் ஒரே தப்பு.. வீட்டை விட்டு வெளியேறுமுன் அவினாஷை கரித்துக்கொட்டிய லக்ஷ்மி பிரியா!
லக்ஷ்மி பிரியா மற்றும் அவினாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Sep 2026 14:05 PM IST

மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றாக கருதப்படுவதுதானா பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. அந்த விதத்தில் 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் (Vijay Sethupathi) தொகுத்துவருகிறார். இந்நகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 3வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் மீது கலவையான விமர்சனங்கள் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளுடனே தொடங்கியிருந்தது.

புதுவிதமாக கடந்த வாரத்திலிருந்து லீடர் எக்சிட் லிஸ்ட் மூலமாக போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், கடந்த வாரம் ஜாவித் வெளியேற்றப்பட்டிருந்தார், அந்த விதத்தில் 3வது வாரத்தில் தற்போது லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன் லக்ஷ்மி பிரியா (Lakshmi Priya), வீட்டின் இந்த வார தலைவர் அவினாஷ் அசோக்கை திட்டியது தொடர்பான புரோமோ வெளியாகி வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து பட பூஜை..!

வீடை விட்டு வெளியேறும் முன் அவினாஷை சாடிய லக்ஷ்மி பிரியா:

அவினாஷின் விருப்பத்தினால் லக்ஷ்மி பிரியா, இந்த வாரத்தின் லீடர் க்சிட் லிஸ்டில் இடம்பெற்றிருந்தார். ஷமா இருந்த இடத்தில லக்ஷ்மி பிரியாவை அவர் இணைத்திருந்தார். அந்த விதத்தில் வீட்டின் போட்டியாளர்கள் வாக்குகள்படி, லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுளார். அந்த விதத்தில் வீட்டை விட்டு வெளியேறும் முன் லக்ஷ்மி பிரியா, வீட்டின் தலைவர் அவினாஷை கடுமையாக திட்டியுள்ளார்.

இதையும் படிங்க: இசைக்கு பின்னால் இருக்கும் அரசியல்.. ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

அந்த புரோமோவில் லக்ஷ்மி பிரியா, “அந்த ஒரு நபரை (அவினாஷ்) எதையும் செய்ய விட்டு விடாதீர்கள், எனக்காக அதை பண்ணுங்க.. இருந்ததில் மிகவும் ஓர்ஸ்டான லீடர். இப்போது நான் வெளியே போகிறேன், நான் உனக்காக விளையாடியது மட்டும்தான் எனது ஒரே தப்பு. இத்தனை சீசன்களிலே மிகவும் ஓர்ஸ்டான போட்டியாளர் நீ ஒருத்தன் மட்டும்தான்” என அவினாஷை தனது கடுமையான வார்த்தைகளால் திட்டியிருந்தார்.

வீட்டின் தலைவர் அவினாஷை தனது கடுமையான வார்த்தைகளால் திட்டிய லக்ஷ்மி பிரியா குறித்த புரோமோ:

3வது வாரத்தில் லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை (26/09/2026) நடைபெறும் விஜய் சேதுபதி மற்றும் போட்டியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வார். அதில் அவர் யார் யாரையெல்லாம் பழிவாங்குவார் என்பது குறித்து இணையத்தில் மீம்கள் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us