Dhanush: கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பீஸ்.. டோரதி படத்தை பாராட்டிய தனுஷ்!
Dhanush Praises The Film Dorothy: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பிலும், இயக்கத்திலும் பல படங்கள் உருவாகிறது. அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் டோரதி படம் வெளியாகி தயாராகியுள்ள நிலையில், அதை தனுஷ் பாராட்டி பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நாயகனாக இருந்து, தற்போது தனது இயக்கத்தில் படங்களை உருவாக்கிவருபவர்தான் தனுஷ் (Dhanush). இவர் தொடர்ந்து மற்ற இயக்குநர்களில் இயக்கத்திலும் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் கர (Kara). கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்கப்படவில்லை. இந்த படத்திற்கு பின் தனுஷ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் ஓம் (OM) படத்தில் நாயகனாக நடித்துவந்தார். இதன் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj) மற்றும் தனுஷ் இடையே நல்ல நட்பு இருந்துவருகிறது.
அந்த விதத்தில் இவர்கள் கூட்டணியில் ஜகமே தந்திரம் என்ற படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 10வது உருவாகியுள்ள திரைப்படம்தான் டோரதி (Dorothy). இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதை நடிகர் தனுஷ் பாராட்டி பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பென்ஸ் படத்தின் நிலை என்ன? அப்டேட் கொடுத்த நிவின் பாலி!
டோரதி படம் குறித்து தனுஷ் பாராட்டிய விஷயம்:
நடிகர் தனுஷ் அந்த பதிவினுள், “டோரதி படமானது கார்த்திக் சுப்புராஜின் படங்களில் மாஸ்டர் பீஸ். இப்படம் ஒரு தைரியமான மற்றும் மனதை தொடும் படம். இயல்பான மற்றும் தீவிரமான ஒரு கதை, ஒவ்வொரு நடிகரும் அற்புதமாக நடித்துள்ளனர். நமது இசை மேஸ்ட்ரோ இளையராஜா சாரின் பேக்ரவுண்ட் மியூஸிக் உங்களை மெய்மறக்கச் செய்யும்.
இதையும் படிங்க: கார்த்திக் சுப்பராஜின் டோரதி படம் மலேசியாவில் தடை.. காரணம் என்ன?
இசைஞானி திரைப்படத்திலிருந்து ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். நாளை (25/09/2026) வெளியாகும் இப்படத்தில், என் அன்பு நண்பர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் டோரதி படத்தை பாராட்டி தனுஷ் வெளியிட்ட பதிவு:
Dorothy – a masterpiece from @karthiksubbaraj
Bold and poignant. Raw and intense. Every actor has performed brilliantly. Our maestro ilayaraja sir’s background score will blow your mind away. Rudhrathandavam from isaignani. Best wishes to my dear friend Karthick subbaraj and…— Dhanush (@dhanushkraja) September 24, 2026
கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் கூட்டணியில் இந்த டோரதி படமானது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷின் வேடம் மிகவும் சிறப்பாக அமையும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் இப்படம் வெளியாகும் நிலையில், நிச்சயம் வரவேற்கப்படும் என கூறப்படுகிறது.



