AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dorothy: கார்த்திக் சுப்பராஜின் டோரதி படம் மலேசியாவில் தடை.. காரணம் என்ன?

Dorothy Movie Update: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில், தமிழில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் டோரதி. இதில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை மலேசியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாம். அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

Dorothy: கார்த்திக் சுப்பராஜின் டோரதி படம் மலேசியாவில் தடை.. காரணம் என்ன?
கார்த்திக் சுப்பராஜின் டோரதி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Sep 2026 17:23 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் இயக்குநராக மிகவும் பிரபலமானவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj). இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை மொத்தமாக 9 படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ரெட்ரோ (Retro). 202ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படத்தில் சூர்யா (Suriya) மற்றும் பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்திருந்தனர். மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான இப்படமானது ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் கார்த்திக் சுப்புராஜ் தனது 10வது திரைப்படமாக இயக்கியிருப்பதுதான் டோரதி (Dorothy). இதில் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), சனந்த் (Sananth) மற்றும் ரிஷிகாந்த் (Rishikanth) போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது சிறப்பான மற்றும் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகள் உள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் இப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: மாஸ்டர் பிளான் போடும் எதிரணி.. கலாய்த்து பேசிய ஆளும் அணி – வைரலாகும் புரோமோ!

கார்த்திக் சுப்புராஜின் டோரதி படம் மலேசியாவில் வெளியிட தடை:

இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். அந்த விதத்தில் இப்படமானது அதிரடி திரில்லர் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது மலேசியாவில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் காரணமாக பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. மலேசியா, திரைப்படங்களில் LGBTQ தொடர்பான உள்ளடக்கங்கள் மீது கடுமையான தணிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வெளியானது ரன்பீர் கபூரின் லவ் அண்ட் வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

LGBTQ தொடர்பான வாழ்க்கை முறைகளையும் கருப்பொருள்களையும் ஊக்குவிப்பதாகவோ அல்லது சித்தரிப்பதாகவோ கருதப்படும் திரைப்படங்களை அதிகாரிகள் நிராகரிக்கக்கூடும். இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டோரதி படத்தின் ட்ரெய்லர் குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த டோரதி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், இவரின் இசையில் இதுவரை மொத்தம் 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. 3வது பாடல் இன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் கார்த்திக் சுப்புராஜுக்கு இது வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us