வெளியானது ரன்பீர் கபூரின் லவ் அண்ட் வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Love and War first look Poster | பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள லவ் அண்ட் வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்தி சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரன்பீர் கபூர். இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து பலப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரன்பீர் கபூர். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அனிமல். படம் வெளியான போது பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தாலும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் அடுத்தடுத்து இந்தி சினிமாவில் ராமாயணா மற்றும் லவ் அண்ட் வார் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இரண்டு படங்களின் கதையும் வெவ்வேறு ஜானரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




வெளியானது ரன்பீரின் லவ் அண்ட் வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
இந்த நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள லவ் அண்ட் வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் சஞ்சை லீலா பன்சாலி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் உடன் இணைந்து நடிகர்கள் விக்கி கௌஷல் மற்றும் ஆலியாபட் ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். மேலும் படம் வருகின்ற ஜனவரி மாதம் 21-ம் தேதி 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஜேசன்… திணறிய எதிரணி தலைவர் ராகவ் – வைரலாகும் வீடியோ!
லவ் அண்ட் வார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Woh rutba, woh raub, woh junoon!
Sanjay Leela Bhansali’s Love & War on 21st January 2027 ❤️
See you at the movies! 🎬#LoveAndWar@saregamaglobal #RanbirKapoor @vickykaushal09 @aliaa08 pic.twitter.com/QAYrg7ODsu
— BhansaliProductions (@bhansali_produc) September 24, 2026