இயக்குநர் ராமின் இயக்கத்தில் வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர்!
Yezhu Kadal Yezhu Malai Movie Release Trailer Out Now | நடிகர் நிவின் பாலி தற்போது தமிழ் சினிமாவில் நடித்து உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படம் பல திரையிடல்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் நமது வாழ்க்கையில் நடைபெறும் நாம் பார்த்தும் எதுவும் தெரியாதது போல கடந்து போகும் பல நிகழ்வுகளை மையமாக வைத்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் ராம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் கற்றது தமிழ். இந்தப் படத்தின் மூலம் உலகமயாக்கள் எந்த அளவிற்கு பலரை பாதித்து உள்ளது என்பது குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தற்போது தமிழக ரசிகர்களிடையே கல்ட் படம் என்று கொண்டாடப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியனா படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்தது.
இந்த நிலையில் இயக்குநர் ராம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் பறந்து போ. அம்மா மற்றும் அப்பா என இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் போது தனியாக இருக்கும் குழந்தைகளின் மனநிலையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதுதான் இயக்குநர் ராம் இயக்கத்தில் அதிக அளவில் வரவேற்பை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.




வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர்!
இந்த நிலையில் இயக்குநர் ராம் இயக்கத்தில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடித்து இருந்தார். மேலும் நடிகர் சூரி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இளைஞரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது
நடிகர் நிவின் பாலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
OUT NOW! Release Trailer of Director Ram’s #YezhuKadalYezhuMalai is here!
In theatres from October 1, 2026
Written and Directed by #DirectorRamA @thisisysr musical
Produced by @vhouseofficial
Link – https://t.co/3pc3V9nDx4#DirectorRam @yoursanjali @sooriofficial @eka_dop…
— Nivin Pauly (@NivinOfficial) September 23, 2026
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜேசனைப் பார்த்து துப்பிய ஷமா – வைரலாகும் வீடியோ