AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிறை பட நடிகர் அக்ஷய் குமார் மற்றும் பாசில் ஜோசப்பின் ராவடி பட ரிலீஸ் எப்போது?

Raawadi Movie Release Date: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்துவருபவர்தான் எஸ்.எஸ்.லலித்குமார். இவரின் மகன் தான் அக்ஷய் குமார். இவர் சிறை படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்த நிலையில், தற்போது இவர் நடித்துள்ள புதிய படம்தான் ராவடி. தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறை பட நடிகர் அக்ஷய் குமார் மற்றும் பாசில் ஜோசப்பின் ராவடி பட ரிலீஸ் எப்போது?
ராவடி திரைப்பட வெளியீட்டு தேதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Sep 2026 17:22 PM IST

கோலிவுட் சினிமாவில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் (Seven Screen Studios) நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்துவருபவர் எஸ்.எஸ்.லலித் குமார் (S.S. Lalit Kumar). இவரின் மகனும் நடிகருமான இருந்துவருபவர்தான் அக்ஷய் குமார். இவர் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான சிறை (Sirai) படத்தின் மூலமாக பிரபலமானவர். இந்த படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்குநராக இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் அக்ஷய் குமார் (LK Akshay Kumar) புதிய திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருந்த அந்த திரைப்படம்தான் ராவடி (Raawadi).

இதை இயக்குநர் விக்னேஷ் வடிவேல் (Vignesh Vadivel) இயக்கியுள்ள நிலையில், இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருடன் மிகவும் முக்கியமான வேடத்தில் மலையாள நடிகர் பாசில் ஜோசப் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், இதன் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

அக்ஷய் குமார் மற்றும் பாசில் ஜோசப்பின் ராவடி படத்தின் ரிலீஸ் தேதி:

இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஷர்மா நடித்துள்ளாராம். மேலும் ஜோசப், ஜாப்ரி சாதிக்,அருணாச்சலேஸ்வரன், ஷரீக் ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிக் பாஸில் இந்தவார நாமினேஷன்.. கதறி அழுத்த ஆனந்தி – வைரலாகும் புரோமோ!

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அந்த விதத்தில் இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.தற்போது இதன் சிறப்பான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாசில் ஜோசப் மற்றும் அக்ஷய் குமாரின் ராவடி படத்தின் ரிலீஸ் டீசர் குறித்து வெளியான பதிவு:

இந்த ராவடி படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், ரிலீசுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளது. அந்த விதத்தில் தொடர்ந்து இப்படத்திலிருந்து அப்டேட்டுகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us