Dhanush: தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
Om Movie Update: கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ஓம். இதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ் தயாரித்துள்ளார். இந்த படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர (Kara). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஓம் (OM Movie). இந்த படத்தை தனுஷ், பெரியசாமி ராஜ்குமார் (Rajkumar periasamy) இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு ஒரு நாளுக்கு முன்புதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) ஜெயிலர் 2 (Jailer 2) படமானது வெளியாக காத்திருக்கிறது.
அந்த விதத்தில் ஜெயிலர் 2 படத்துடன் மோதுவதை தவிர்ப்பதுக்கு ரிலீஸ் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. தற்போது அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிக்காசோ படம் தனுஷின் அந்த படத்தின் வெற்றியில் பாதியாவது இருக்க வேண்டும் – அபிஷன் ஜீவிந்த்
தனுஷ் ஓம் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:
இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க வேடத்தில் மம்முட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், இவரின் இசையில் இப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரத்த கரையில்… நானியின் தி பாரடைஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? – சென்சார் அப்டேட் இதோ!
மேலும் 2வது பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை வரும் 2026ம் நவம்பர் 27ம் தேதி அல்லது டிசம்பர் 2ம் தேதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் ஓம் படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:
#Dhanush’s #OM is being planned for a November 27 or December 2 release. 🔥 pic.twitter.com/ZW41639YoI
— Movie Tamil (@_MovieTamil) September 21, 2026
இந்த படத்திற்கு பிறகு தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி56 படத்தில் இணைகிறார். இந்த படத்தை தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் நவம்பர் மாதத்தில் தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.