ஆளுமையில் இருக்கும் குக்கிங் கேப்டனை அடிக்கவேண்டும்.. மாஸ்டர் பிளான் போட்ட சாத்விகா – லட்சுமி பிரியா!
Bigg Boss Tamil Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி, 2-வது வாரத்தை கடந்து 3வது வாரத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தன் தொடக்கத்திலே குக்கிங் டீம் பிரச்சனையுடன் ஆரம்பமான நிலையில், டீம் கேப்டன், அன்சரை அடிக்க, லட்சுமி பிரியா மற்றும் சாதிகா போடும் மாஸ்டர் பிளான் குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியின் சீசன் 10-ஆனது (Bigg Boss Season 10) கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியோடு தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 2 வாரங்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் பல்வேறு சண்டைகள் மற்றும் பிரச்சனைகளுடன் இந்த ஷோவானது தொடங்கிய நிலையில், இதன் மீது விமர்சனங்கள் அதிகம் இருந்துவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களுடன் தொடங்கிய நிலையில், 2 வாரங்களில் மொத்தம் 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். ஜாவித் மற்றும் மணிவண்ணன் போன்ற போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், பிளாக் பாண்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டிருந்தார். மேலும் இந்த வாரத்தில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்திருந்த நிலையில், தனது கேள்வி ஜாலத்தினால் அனைவரையும் வெளுத்துவங்கியிருந்தார்.
இன்று (21/09/2026) இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 3வது வாரத்தை தொடங்கிய நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளிலே சண்டையுடன் தொடங்கியுள்ளது. கிச்சன் டீம் கேப்டன், சாதிகாவுக்கு இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், அதை சாத்விகா, லெட்சுமி பிரியாவிடம் விளக்கி, பிளான் போடும் வகையில் புரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: மண்டாடி வகையரா.. சூரியின் முதல் ரூ 100 கோடி வசூல்.. வெற்றி மிதப்பில் மண்டாடி படக்குழு!
அன்சரை அடிக்கவேண்டுமென திட்டமிடும் சாதிகா மற்றும் லட்சுமி பிரியா:
அந்த புரோமோவில் லட்சுமி பிரியா முதலில், கிச்சன் டீம் கேப்டன் ராகவ்வை திட்டுவதுபோல உள்ளது. கிட்சன் டீம் கேப்டனாக இருந்து அவர் எதையும் கேட்கமாட்டேன் என்கிறார் என அதில் லட்சுமி பிரியா சொன்னார். உடனே பேசிய சாதிகா, கிட்சன் டீமில் இருக்கும் அன்சர் தன்னிடம் பேசிய விஷயம், தன்னிடம் நடந்துகொண்ட செயல் குறித்து பேசியுள்ளார். மேலும் பேசிய சாதிகா, ஆளுமையில் இருக்கும் கிச்சன் டீம் கேப்டனை அடிக்கவேண்டும் என அதில் பேசியுள்ளார். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் நியூ லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது
லட்சுமி பிரியா மற்றும் சாதிகா பிளான் போடும் புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day15 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/LtSl0qDSzy
— Vijay Television (@vijaytelevision) September 21, 2026
கடந்த வாரத்தில் பிக் பாஸ் சீசன் 10ல் இருந்து மொத்தம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுட்டுள்ளார். ஜாவித் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியில் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அதை தொடர்ந்து நேற்று (20/09/2026) வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த மணிவண்ணன் வெளியேற்றப்பட்டிருந்தார். இதுவரை மொத்தம் 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், 3வது வாரத்தில் எந்த ஏவிக்ஷனும் இருக்காது என கூறப்படுகிறது.