டபுள் கேம் தன்யா.. மாத்தி மாத்தி பேசும் லட்சுமி பிரியா – வார்த்தைகளால் வெளுத்து வாங்கிய ஜாவித் – அனல் பறக்கும் புரோமோ!
Bigg Boss Tamil 10: தமிழ் பிக் பாஸ் சீசன் 10ல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்து வழங்கிவரும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஜாவித் கடந்த வெள்ளிக்கிழமையில் வெளியேறிய நிலையில், இன்று (18/09/2026) அவர் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். இந்நிலையில் ஷாக் போட்டியாளர்களை வெளுத்துவங்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) தற்போது அதிக டிஆர்பி எகிறும் நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் ஆண்டில் தொடங்கிபட்டிருந்தது. அதே தேதியில் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் ஒரே நாளில் தொடங்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் இந்நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 2 வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிளாக் பாண்டி மற்றும் ஜாவித் போன்ற போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வராத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இருந்த மணிவண்ணன் வெளியேறுகிறாராம். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை (18/09/2026) ஜாவித் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அந்த விதத்தில் இந்த போட்டியானது தொடங்கி கிட்டத்தட்ட 2 வாரங்களான நிலையில், மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களும் உள்ளே நுழைவார்கள் என கூறப்படுகிறது. இன்று (20/09/2026) வெளியேறிய ஜாவித், விஜய் சேதுபதியை (Vijay Sethupathi) சந்தித்து மேடையில் பேசியுள்ளார். தற்போது அது குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: பல உண்மை கதைகளை மையமாக கொண்ட கதை.. மீசையமுறுக்கு 2 படம் பற்றி பேசிய ஹிப்ஹாப் ஆதி!
சக போட்டியாளர்களை வெளுத்துவங்கிய ஜாவித்:
அந்த ப்ரோமோவில் ஜாவித், “முகேஷ் உன்னை எல்லாரும் கோவிந்தாவாக இருப்பதாக சொன்னார்கள், இன்னும் கோவிந்தவாவே தான் இருக்க, வெளியே வா” என கூறினார். மேலும் தன்னுடன் நெருக்கமான இருந்த தனியாவை, “டபுள் கேம் தன்யா, இங்க ஒன்னு அங்க ஒன்னு-னு பேசாதீங்க, உண்மையாக இருங்க” என கூறினார்.
இதையும் படிங்க: வெற்றி வெற்றி வெற்றி… பார்சிலோனா கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!
மேலும் லட்சுமி பிரியா பற்றி சொன்ன ஜாவித், “மாற்றி மாற்றி பேசும் லட்சுமி பிரியா, ஒருத்தர்கிட்ட ஒரு முகம், இன்னொருத்தர்கிட்ட இன்னொரு முகம். எப்போதுமே ஒரே முகமாக இருங்க. உங்களுக்காக மற்றவர்களை யூஸ் பண்ணாதீங்க” என இந்த மூவரையும் வெளுத்து வாங்கியுள்ளார். தற்போது இது தொடர்பான புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
சக போட்டியாளர்கள் ஜாவித் வெளுத்துவங்கியது தொடர்பான பிக் பாஸ் புரோமோ குடித்த பதிவு:
#Day14 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/bIR046p0Vr
— Vijay Television (@vijaytelevision) September 20, 2026
2வது வாரத்தை நெருங்கிய நிலையில், இன்னும் கிட்டத்தட்ட 10 வாரங்களுக்கு மேல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பலர் மத்தியில் விமர்சனங்களையும் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.