பிக் பாஸில் இந்த வாரத்தில் வெளியேறும் நபர் யார்? வெளியான புரோமோ!
Bigg Boss Season 10 Week 2 Eviction: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 2வது வாரத்தின் இறுதியான நிலையில், இந்த வாரத்தில் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிலிருந்து வெளியேறும் நபர் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது 100 நாட்கள் தொடந்து ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுக்க சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 2வது வாரத்தை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை மொத்தமாக 2 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பிளாக் பாண்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அதன் பிறகு கடந்த வாரத்தில் ஜாவித்தும் வெளியேற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றுடன் (20/09/2026) இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 14 நாட்களான நிலையில், இந்த வாரத்தில் ஏவிக்ஷன் இருக்கிறதாம்.
அதில் அஸ்மிதா மற்றும் மணிவண்ணன் என இரு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கும் நிலையில், யார் வெளியேற்றப்படுவார் அதுகுறித்த புரோமோ வெளியாகியுள்ளது. அதில் எந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: நந்தன் பயணம் இன்னும் முடியவில்லை – இயக்குநர் சரவணன் வெளியிட்ட பதிவு
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 2வது வாரத்தில் வெளியேற்றப்படும் அந்த போட்டியாளர் யார்?:
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி தற்போதுவரையிலும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து பிளாக் பாண்டி மற்றும் ஜாவித் என இரு போட்டியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில், 2வது வாரத்தில் 3வது வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திர வீடியோ
இந்த ஏவிக்ஷனில் ஆஸ்மி மற்றும் மணிவண்ணன் என இருவரும் இருந்த நிலையில், இதில் மணிவண்ணன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது வெளியான புரோமோவில், விஜய் சேதுபதி, யார் வெளியேறப்போகிறார் என்ற கார்டை காட்டியதும், ஆனந்தி “மணிவண்ணன்” என தனது வாயால் கூறுவதுபோல அந்த புரோமோவில் உள்ளது. தற்போது இது இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 14வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day14 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/Oul5bJNm5y
— Vijay Television (@vijaytelevision) September 20, 2026
அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 2வது வாரத்தில் மணிவண்ணன் வெளியேற்றப்பட்டுளார் என தகவல்கள வெளியாகியுள்ளது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியில் ஜாவித் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து மணிவண்ணன் வெளியேற்றப்பட்டுள்ளார். அந்த வித்தை இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் 2 ஏவிக்ஷன் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.