தங்களின் பேட் கேம் ஸ்டாட்ஜியை சொன்ன பிக் பாஸ் போட்டியாளர்கள் – வைரலாகும் ப்ரோமோ!
Bigg Boss Tamil 10: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தமிழில் சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஜூனியர் பிக் பாஸ் என்ற டாஸ்க் நடந்துவரும் நிலையில், அதில் முனியம்மாள் ஜூனியர் பிக் பாஸாக இருக்கிறார். அவர் போட்டியாளர்களிடையே அவர் அவர்களின் தீய எண்ணங்கள் குறித்து தெரிவிக்கும்படி சொன்ன ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பேமஸான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது 2026 ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியுடன் தொடங்கிய நிலையில், இன்றுடன் (11/11/2026) இந்நிகழ்ச்சியானது 66வது நாளை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், கிட்டத்தட்ட 10 வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரத்தில் ஜூனியர் பிக் பாஸ் என்ற டாஸ்கானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் ஜூனியர் பிக் பாஸாக (Junior Big Boss) வினோத் பாபு இருந்த நிலையில், அவர் அதிலிருந்து விலகிவிட்டார். தற்போது 2வது ஜூனியர் பிக் பாஸாக முனியம்மாள் (Muniyammal) இருக்கிறார்.
அந்த விதத்தில், முனியம்மாள் கொடுத்த புதிய டாஸ்க் ஒன்றில், போட்டியாளர்கள் தங்களின் கெட்ட எண்ணங்கள் குறித்து ஓபனாக பேசவேண்டும். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: மலையாள சினிமாவில் ஃபேமிலி காமெடி பாணியில் வெளியான இந்த அவராச்சன் & சன்ஸ் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!
தங்களின் கெட்ட குணங்களை ஓபனாக சொன்னான் போட்டியாளர்கள்:
இந்த ப்ரோமோவில், போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அவர் அவர்களில் கெட்ட எண்ணங்கள் குறித்து பேச தொடங்கியுள்ளனர். முதல் நபராக அடாவடி அன்சர், தனது கேம் பிளான் குறித்து வெளிப்படையாக சொன்னார். அதன் பிறகு வினோத் பாபு பேசிய நிலையில், அவரும் அவரின் கெட்ட எண்ணங்கள் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஓம் படத்தில் மம்முட்டி – சாய் பல்லவியை தேர்ந்தெடுக்க காரணம் அதுதான் – ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!
மேலும் பேசிய ஜேசன், தான் எல்லாரையும் மதிப்பதுபோல நடிப்பதாகவும், ஆனால் மனதிற்குள் யாரையும் மதிக்கமாட்டேன் என கூறியிருந்தார். இவ்வாறாக முகேஷ், டிடிஃஎப் வாசன் மற்றும் அனைத்து போட்டியாளர்களும் தங்களின் காட்டாத பக்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். இது குறித்து ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் ப்ரோமோ:
#Day66 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/heAFOxYIRE
— Vijay Television (@vijaytelevision) November 11, 2026
இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 66வது நாளாகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 8 போட்டியாளர்கள் நாமிநேஷனலில் உள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரத்தில் எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் எவிக்ஷன் இருந்தால் முத்தழகி அல்லது அவினாஷ் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.