வாத்தா இல்ல கோழியா? ஜூனியர் பிக் பாஸ் முனியம்மாளால் தடைபட்டு நிற்கும் டாஸ்க்!
Bigg Boss Season 10 Tamil: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி 66வது நாளில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் ஜூனியர் பிக் பாஸாக போட்டியாளர்களே மாறிமாறி இருக்கும் நிலையில், தற்போது முனியம்மாள் இருக்கிறார். மாற்றப் போட்டியாளர்கள் டாஸ்கில் இருக்கும்போது, அவர் விளையாடிக் கொண்டிருக்கும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்நிகழ்ச்சியானது தற்போது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இது தொடங்கி கிட்டத்தட்ட 66 நாட்களாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்கப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், தற்போது 10வது வாரத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது மொத்தமே 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். வாரா வாரம் இந்த வீட்டில் டாஸ்க் ஓன்று சிறப்பாக நடக்கும் என்ற நிலையில், இந்த வாரத்தில் ஜூனியர் பிக் பாஸ் (Junior Bigg Boss Task) என்ற சிறப்பான டாஸ்க் நடக்கிறது.
இதில் வினோத் பாபு முதலில் ஜூனியர் பிக் பாஸாக இருந்த நிலையில், தற்போது முனியம்மாள் ஜூனியர் பிக் பாஸாக இருந்துவருகிறார். இந்நிலையில் அவர் டாஸ்கை கவனிக்காமல், பொம்மையுடன் விளையாடிக்கொண்டிக்கும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: 10 வருட காதல் வாழ்க்கை.. காதலர் ராஜ் வேலுவை கரம்பிடித்து நடிகை பிரியா பவானி சங்கர்!
டாஸ்கை கவனிக்காமல் பொம்மையுடன் விளையாடிய ஜூனியர் பிக் பாஸ் முனியம்மாள்:
இந்த ப்ரோமோவில், மற்ற ஹவுஸ் மமேட்ஸ் அனைவரும் பானையை வைத்து டாஸ்க் ஒன்றை செய்துவருகிறார்கள். லக்ஷ்மி பிரியா, ஜேசன் மற்றும் முகேஷ் மூவரும் இந்த டாஸ்கை செய்திருந்த நிலையில், யார் வெற்றிபெற்றுள்ளார் என ஜூனியர் பிக் பாஸ்தான் கண்காணித்து சொல்லவேண்டும் அந்த வகையில், ஜூனியர் பிக் பாஸாக தற்போது பதவியில் இருக்கும் முனியம்மாள், அதை கண்டுகொள்ளாமல், வாத்து பொம்மையுடன் விளையாடியுளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஜூனியர் பிக்பாஸ் பதவியிலிருந்து வெளியேற நினைக்கும் முனியம்மாள் – என்ன நடந்தது?
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 66வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day66 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில..
#BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/0BZDnCg3Ji
— Vijay Television (@vijaytelevision) November 11, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தமிழில் தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த வாரத்தில் இந்த பிக் பாஸ் வீட்டில் பிக் பாஸ் குரல் இல்லாத நிலையில், போட்டியாளர்கள் ஜூனியர் பிக் பாஸாக இந்த நிகழ்ச்சியில் குரல் கொடுத்துவருகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்த டாஸ்கானது ஆட்டம் சூடுபிடிக்கும் நிலையில், தற்போது ஜூனியர் பாஸாகி இருக்கும் முனியம்மா எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.