AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அன் ஆர்டினரி மேன் படத்தின் 2-வது சிங்கிள் லார்டா லபக்கா ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

An Ordinary Man 2nd Single Update | நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் அன் ஆர்டினரி மேன் படத்தின் இரண்டவது சிங்கிளாகா உருவாகி உள்ள லார்டா லபக்கா என்ற பாடல் எப்போது வெளியாக உள்ளது என்பது குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.

அன் ஆர்டினரி மேன் படத்தின் 2-வது சிங்கிள் லார்டா லபக்கா ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
அன் ஆர்டினரி மேன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2026 13:00 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் ரவி மோகன் (Ravi Mohan). இவர் சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது கடின உழைப்பின் காரணமாக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் அவர் தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தொடர்ந்து இவரது தயாரிப்பில் உருவாகும் படங்கள் மற்றும் இயக்கத்தில் உருவாகும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் ரவி மோகனின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் அன் ஆர்டினரி மேன்.

இந்த அன் ஆர்டினரி மேன் படத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கெனிஷா இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அன் ஆர்டினரி மேன் படத்தின் லார்டா லபக்கா சிங்கிள் ரிலீஸ் எப்போது?

அதன்படி ரவி மோகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் இந்த அன் ஆர்டினரி மேன் படத்தில் இருந்து முன்னதாக வெளியான முதல் சிங்கிள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி இசையமைப்பாளர் கெனிஷாவின் இசையில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளாக லார்டா லபக்கா என்ற பாடல் உருவாகி உள்ளது. இந்தப் பாடல் நாளை 12-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மீண்டும் இணையும் விஷால் – பி.எஸ்.மித்திரன்? வைரலாகும் தகவல்

அன் ஆர்டினரி மேன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்திலிருந்து வெளியானது கிளிம்ஸ் வீடியோ

Follow Us